Home /News /tamil-nadu /

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த அவதூறு வழக்கு ரத்து

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த அவதூறு வழக்கு ரத்து

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

2015ஆம் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி ஊழல் செய்ததாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி அளித்திருந்தார்.

    முன்னாள் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறாக பேசியதாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது போடபட்ட அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கடந்த 2015ஆம் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி ஊழல் செய்ததாக அப்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி அளித்திருந்தார். இதை கலைஞர் தொலைக்காட்சியில் செய்தியாக வெளியிடப்பட்டது.

    இந்த செய்தியின் அடிப்படையில் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் அமிர்தம் ஆகியோர் மீது அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.

    Must Read :  பேரறிவாளனின் மனு : சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தகவல் ஆணையம் விளக்கம்

    இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி நிர்மல்குமார், கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் அமிர்தம் மற்றும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் மீது போடப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Defamation Case, Edappadi Palaniswami, EVKS Elangovan

    அடுத்த செய்தி