தீபாவளி சிறப்பு பேருந்துகள்: சென்னையில் எங்கிருந்து புறப்படும்? முழு விவரம்

தீபாவளி சிறப்பு பேருந்துகள்: சென்னையில் எங்கிருந்து புறப்படும்? முழு விவரம்
கோப்பு படம்
  • Share this:
தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில் சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு 4,265 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் வழியாக செல்லும் பேருந்துகள் - கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்தும், ஆந்திர மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படும்.

வேலூர் , திருப்பத்தூர் , ஓசூர், தர்மபுரி செல்லும் பேருந்துகள் பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் இருந்தும், விக்ரவாண்டி , பண்ருட்டி வழியாக கும்பகோணம் , தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் - தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படும்.


திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்தும் திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும் கோவை, சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களுக்கும் செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

Also Watch

First published: October 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading