ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தீபாவளி: சென்னை தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்.. நாளை முன்பதிவு தொடங்குகிறது

தீபாவளி: சென்னை தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்.. நாளை முன்பதிவு தொடங்குகிறது

சிறப்பு ரயில்

சிறப்பு ரயில்

Deepavali Special Train: சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06021) தாம்பரத்தில் இருந்து அக்டோபர் 20 அன்று இரவு 09.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.00 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தீபாவளி பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக காரைக்குடி வழியாக தாம்பரம் - திருநெல்வேலி இடையே தீபாவளி சிறப்பு ரயில் சேவையை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதற்கான முன்பதிவு நாளை (அக்டோபர் 19) தொடங்குகிறது.

  தமிழகத்தில் தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படவுள்ளது. இதற்காக பலரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால் ரயில்களில் டிக்கெட் விரைவாக விற்றுத் தீர்ந்தது. தற்போது பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு செல்லவும் ஏராளமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.

  இந்நிலையில், தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலை சமாளிக்க தாம்பரம் - திருநெல்வேலி ரயில் நிலையங்கள் இடையே ஒரு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி தாம்பரம் - திருநெல்வேலி பண்டிகை கால சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06021) தாம்பரத்தில் இருந்து அக்டோபர் 20 அன்று இரவு 09.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.00 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.

  மறு மார்க்கத்தில் திருநெல்வேலி - சென்னை எழும்பூர் பண்டிகை கால சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06022) திருநெல்வேலியில் இருந்து அக்டோபர் 21 அன்று மதியம் 01.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.

  இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டி, 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், ஒரு மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டி மற்றும் ஒரு சரக்கு பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.

  இதையும் படிங்க: வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! பேன்சி நம்பர் வாங்க இனி ரூ.8 லட்சம் வரை செலவாகும்! புதிய மாற்றம்!

  இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர் சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். திருநெல்வேலி - சென்னை எழும்பூர் பண்டிகை கால சிறப்பு கட்டண சிறப்பு ரயில் கூடுதலாக தாம்பரம், மாம்பலம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான பயண சீட்டு முன்பதிவு அக்டோபர் 19 அன்று காலை 8 மணிக்கு துவங்குகிறது

  Published by:Murugesh M
  First published:

  Tags: Deepavali, Special trains, Train