தீபாவளி சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு தொடக்கம்

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் முன்பதிவு மையத்தை தொடங்கி வைத்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தீபாவளி பண்டிகையை ஓட்டி கோயம்பேடு, பூவிருந்தவல்லி, தாம்பரம் (ரயில் நிலையம்), தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், கே.கே.நகர், மாதவரம் உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து மொத்தம் 11,367 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

 • News18
 • Last Updated :
 • Share this:
  தீபாவளி பண்டிகையை ஒட்டி இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கான கணினி முன்பதிவு மையங்களை தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தொடங்கி வைத்தார்.

  தீபாவளி பண்டிகை நவம்பர் 6-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்னையின் 6 பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

  இந்த பேருந்துகளுக்கான சிறப்பு கணினி முன்பதிவு மையங்களை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

  கோயம்பேடு, பூவிருந்தவல்லி, தாம்பரம் (ரயில் நிலையம்), தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், கே.கே.நகர், மாதவரம் உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து மொத்தம் 11,367 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

  இதில் 3-ம் தேதி 3,575 பேருந்துகளும், 4-ம் தேதி 3,817 பேருந்துகளும், 5-ம் தேதி 3,975 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மேலும் பிற மாவட்டங்களில் 9,200 பேருந்துகள் என மூன்று நாட்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 20,567 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

  சென்னையில் இயக்கப்படும் பேருந்துகளில் செல்ல முன்பதிவு செய்துகொள்வதற்காக கோயம்பேட்டில் 26 மையங்களும், தாம்பரம் சானிடோரியத்தில் 2 மையங்களும், பூந்தமல்லி மற்றும் மாதவரத்தில் தலா 1 மையம் என மொத்தம் 30 சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

  Also watch

  Published by:DS Gopinath
  First published: