ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தீபாவளிக்கு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு 11 லட்சம் பேர் பயணம்!

தீபாவளிக்கு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு 11 லட்சம் பேர் பயணம்!

மாதிரி படம்

மாதிரி படம்

சென்னைக்கு திரும்ப இதுவரை 1,85,052 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தீபாவளிப் பண்டிகைக்கு மொத்தம் 11 லட்சம் பேர் பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்து மற்றும் ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

  தீபாவளியை ஒட்டி, சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களில் 10 ஆயிரத்து 325 அரசு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் அதில் 5 லட்சத்து 63 ஆயிரத்து 541 பேர் பயணித்துள்ளனர். ஆம்னி பேருந்துகளையும் சேர்த்தால் சுமார் ஏழரை லட்சம் பேர் பேருந்துகளில் சென்னையில் இருந்து வெளியூர் சென்றுள்ளனர்.

  இதே போல தெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்பட்ட ரயில்களில் சென்னையில் இருந்து மட்டும் பல்வேறு ஊர்களுக்கும் சுமார் 3.5 லட்சம் பேர் பயணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  போக்குவரத்து துறையின் சார்பில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் இயக்கம் இன்று (24.10.2022) நள்ளிரவு 24.00 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,100 பேருந்துகளில் 2100 பேருந்துகளும், 1072 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டது.

  இதையும் படிங்க: சிவகங்கை மாவட்டத்தை மருதுபாண்டியர்கள் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் : மதுரை ஆதீனம் கோரிக்கை!

  கடந்த (21.10.2022 முதல் 23.10.2022) நேற்று நள்ளிரவு 24.00 மணி வரையில் மொத்தம் 10,325 பேருந்துகளில் 5,63,541 பயணிகள் பயணித்துள்ளனர். மேலும் சென்னைக்கு திரும்ப இதுவரை 1,85,052 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Chennai, Deepavali, Special buses, TNSTC