• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தீபாவளி ஷாப்பிங்: சென்னை வண்ணாரப்பேட்டையில் குவிந்த மக்கள் கூட்டம்!

தீபாவளி ஷாப்பிங்: சென்னை வண்ணாரப்பேட்டையில் குவிந்த மக்கள் கூட்டம்!

தீபாவளி ஷாப்பிங்: சென்னை வண்ணாரப்பேட்டையில் குவிந்த மக்கள் கூட்டம்!

தீபாவளி ஷாப்பிங்: சென்னை வண்ணாரப்பேட்டையில் குவிந்த மக்கள் கூட்டம்!

தீபாவளிக்கு முக்கியத்துவம் அளித்து புத்தாடை வாங்க ராயபுரம் குல்வார் அக்ரம் சாலையில் பொதுமக்கள் குவிந்ததால், அங்கு சமூக இடைவெளி காற்றில் பறந்தது. 

  • Share this:
    பண்டிகைக் காலத்தில் நோய்பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்கிற மத்திய, மாநில அரசுகளின் வேண்டுகோளை மறந்து வண்ணாரப்பேட்டையில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.

    வருகின்ற நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் தீபாவளிக்கு வேண்டிய துணிமணிகளை வாங்கி வருகின்றனர். அந்த வகையில், இந்த வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமையான இன்று வண்ணாரப்பேட்டை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் தீபாவளிக்கு வேண்டிய துணிகளை வாங்க குவிந்தனர்.



    அதனையொட்டி, ராயபுரம் குல்வார் அக்ரம் சாலையில் சமூக இடைவெளியையும் மறந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பொருட்கள் வாங்க அலை மோதினர்.

    பண்டிகை காலங்களில் பொதுமக்கள் கொரோனோ நோய் பரவலை தடுத்திடும் வகையில் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அதையொட்டி அதிக அளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகள் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன.

    எனினும், அதனை பொருட்படுத்தாமல் கொரோனாவை மறந்து பொருட்கள் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டியது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர்: அசோக்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: