ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பள்ளிகளுக்கு தீபாவளி மறுநாள் விடுமுறையா? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

பள்ளிகளுக்கு தீபாவளி மறுநாள் விடுமுறையா? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

பள்ளிகளுக்கு தீபாவளி மறுநாள் விடுமுறையா

பள்ளிகளுக்கு தீபாவளி மறுநாள் விடுமுறையா

தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தீபாவளி பண்டிகை அக்டோபர் 24-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் வெளி மாவட்டங்களிலிருந்து பலர் சொந்த ஊர் திரும்பி உள்ளனர். தீபாவளி வார நாளான திங்கள் கிழமை கொண்டாடப்படுவதால் சொந்த ஊர் சென்றவர்கள் அடுத்த நாள் பள்ளி, அலுவலகம் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதனால் தீபாவளி அன்றே பலர் சொந்த ஊரிலிருந்து திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்கப்பட வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது. புதுச்சேரியில் தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதே கோரிக்கையை அரசு ஊழியர்களும் வைத்துள்ளனர். எனவே

  இந்த கோரிக்கையை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. முதல்வர் விரைவில் அறிவிப்பார்“ என்று தெரிவித்தார்.

  Also Read : விதி மீறி பட்டாசு வெடித்தால் புகார் தெரிவிக்கலாம் : சென்னை கமிஷனர் அறிவிப்பு!

  இதனிடையே தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல கோயம்பேடில் மக்கள் குவிந்து வருகின்றனர். கோயம்பேடு பகுதியில் மட்டும் 700-க்கும் மேற்பட்ட போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிசிடிவி, மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ஆகியோர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Deepavali, Minister Anbil Mahesh