ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இதையெல்லாம் பண்ணாதிங்க.. தீபாவளிக்கு பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி?

இதையெல்லாம் பண்ணாதிங்க.. தீபாவளிக்கு பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஈரமான சாக்குகளை வெடிக்காத பட்டாசுகள் மீது போட்டு அதனை செயலிழக்க செய்வது மிகவும் அவசியம். எக்காரணம் கொண்டும் கைகளில் வைத்துக் கொண்டு பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தீபாவளி பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பட்டாசுகளை எப்படி கவனமுடன் வெடிப்பது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

  பட்டாசுகளை கடையில் வாங்கி செல்லும்போது மிகவும் கவனமுடன் எடுத்து செல்ல வேண்டும். பட்டாசுகளை சமையல் அறைகளில் வைக்கக் கூடாது. பெரியவர்கள் கண்காணிப்பிலேயே சிறுவர்களை பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும்

  பட்டாசுகளை வெடிக்கும் போது அருகில் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும். பட்டாசுகளை வெடிக்கும் போது எளிய கதர் அல்லது பருத்திய ஆடைகளை அணிய வேண்டும். கியாஸ் குடோன், பெட்ரோல் நிலையங்களின் அருகில் பட்டாசுகளை வெடிக்க கூடாது.

  முதியவர்கள், மாற்றுதிறனாளிகள், நோயாளிகள் அருகில் சென்று பட்டாசுகளை வெடிக்க வேண்டாம். வெடிக்காத பட்டாசுகளை எக்காரணம் கொண்டும் கையால் தொடவோ, காலால் மிதிக்கவோ கூடாது. ராக்கெட், புஸ்வானம் போன்ற பட்டாசுகளை வைக்கோல் போர், குடிசைகள், தென்னை ஓலை வேய்ந்த கூரைகள் அதிகம் உள்ள இடங்களில் வெடிக்க வேண்டாம்.

  டப்பாக்கள், கண்ணாடி பாட்டில்கள், டின்கள் போன்றவற்றில் வைத்து பட்டாசுகளை வெடிக்க கூடாது. பட்டாசுகளை கொளுத்தி தெருவிலோ, மற்றவர்கள் மீதோ வீசக் கூடாது.மெழுகுவர்த்தி மற்றும் தீப்பெட்டி மூலமாக பட்டாசுகளை கொளுத்த கூடாது. ஊதுபத்தி மூலமே கொளுத்த வேண்டும்.

  இதையும் படிங்க: நியூஸ்18 வாசகர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துகள்!

  ஈரமான சாக்குகளை வெடிக்காத பட்டாசுகள் மீது போட்டு அதனை செயலிழக்க செய்வது மிகவும் அவசியம். எக்காரணம் கொண்டும் கைகளில் வைத்துக் கொண்டு பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.

  பட்டாசு தீ விபத்தால் காயமடைந்தால் அதன் மீது பேனா மை போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. பட்டாசு வெடிக்கும்போது ஏற்படும் தீக்காயத்தின் குளிர்ந்த நீர் ஊற்ற வேண்டும். சுய சிகிச்சை முறைகளை தவிர்த்து உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Crackers, Deepavali