• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தீபாவளி பண்டிகை: கூடுதல் பேருந்து சேவை...கொட்டும் மழையிலும் சொந்த ஊர்களுக்கு செல்ல காத்திருக்கும் மக்கள்!

தீபாவளி பண்டிகை: கூடுதல் பேருந்து சேவை...கொட்டும் மழையிலும் சொந்த ஊர்களுக்கு செல்ல காத்திருக்கும் மக்கள்!

சொந்த ஊர்களுக்கு செல்ல காத்திருக்கும் மக்கள்

சொந்த ஊர்களுக்கு செல்ல காத்திருக்கும் மக்கள்

தீபாவளி பண்டிகையை (Deepavali) ஒட்டி கடந்த இரண்டு தினங்களில் மொத்தம் 5,932 பேருந்துகளில் 2,34,918 பயணிகள் பயணித்துள்ளனர் என்று போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 1,07,744 பயணிகள் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. 

  • Share this:
    தீபாவளி பண்டியையை ஒட்டி சொந்த ஊர்களுக்கு  பயணம் செல்வதற்காக  கொட்டும் மழையிலும் பொதுமக்கள்  காத்திருக்கின்றனர். பொதுமக்கள் வசதிக்காக இன்று சென்னையில் இருந்து  3,640 பேருந்துக்கள் இயக்கப்படவுள்ளன.

    தீபாவளி (Deepavali)  பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றனர். நாளை தீபாவளி என்பதால் இன்று சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

    நேற்று இரவு 12 மணி நிலவரப்படி,  வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,100 பேருந்துகளில் 2,100 பேருந்துகளும், 1,344 சிறப்பு பேருந்துகளும் ஆக கடந்த இரண்டு தினங்களில் மொத்தம் 5,932 பேருந்துகளில் 2,34,918 பயணிகள் பயணித்துள்ளனர் என்று போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 1,07,744 பயணிகள் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவரும் நிலையில், அதனை பொருட்படுத்தாது பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு மும்முரமாக புறப்பட்டு சென்று வருகின்றனர்.  திருப்பூரில் கொட்டும் மழையிலும்  நனைந்தபடி பேருந்துகளில் செல்ல  தொழிலாளர்கள் குவிந்தனர்.

    இதையும் படிங்க: அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியிட்ட தலைமை செயலாளர்!


    திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இன்று முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.

     

    தீபாவளி பண்டிகையை தங்கள் உறவினர்களுடன் இணைந்து கொண்டாட வேண்டும் என்ற ஆவலில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் மழையில் நனைந்தபடி சொந்த ஊருக்கு செல்ல தொழிலாளர்கள் பேருந்து நிலையங்களில் குவிந்தனர். கூட்ட நெரிசலை தவிர்க்க 4 இடங்களில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டிருந்தது.

    மேலும் படிக்க: அதிக கட்டணம் வசூல் செய்த ஐந்து பேருந்துகள் மீது நடவடிக்கை - அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம்


     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: