ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தீபாவளிக்கு மறுநாள் லீவு கிடைக்குமா? பொதுமக்கள் கோரிக்கை

தீபாவளிக்கு மறுநாள் லீவு கிடைக்குமா? பொதுமக்கள் கோரிக்கை

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகை

Deepavali Holidaty | தீபாவளிக்கு அடுத்த நாளான செவ்வாய் வேலை நாளாக இருப்பதால், தீபாவளி அன்றிரவே பொது மக்கள் தாங்கள் வசிக்கும் ஊர்களுக்கு திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தீபாவளிக்கு மறுநாள் உள்ளூர் விடுமுறை  அறிவிக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

  2022ம் ஆண்டிற்கான தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 24 திங்களன்று வருகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று கொண்டாடுவது வழக்கம். சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்கள் தொடர் விடுமுறையாக வருவதால், இந்தாண்டு சொந்த ஊருக்குச் செல்லும் பொது மக்களின் எண்ணிக்கை மிகவும் கூடுதலாக இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது.

  எனினும், தீபாவளிக்கு அடுத்த நாளான செவ்வாய் வேலை நாளாக இருப்பதால், தீபாவளி அன்றிரவே பொது மக்கள் தாங்கள் வசிக்கும் ஊர்களுக்கு  திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, பொது மக்கள் மனத்திருப்தியுடன் பண்டிகையைக் கொண்டாடும் வகையில்,  25ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

  இதையும் வாசிக்க:  தீபாவளிக்கு போனஸ் கட்டாயமா? ரூல் என்ன சொல்லுது? போனஸில் பல விஷயம் இருக்கு.. தெரிஞ்சுக்கோங்க!

  கடந்தாண்டு, வியாழக்கிழமை (04.11.2022) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. சொந்த ஊருக்குச் செல்லும் மக்களுக்கு பயனளிக்கும் வகையில், வெள்ளிக்கிழமையை விடுமுறையாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என நான்கு நாட்கள் தொடர் விடுமுறையாக இருந்தது.  இந்த ஆண்டும் தீபவாளிக்கு அடுத்த நாள் விடுமுறை  அறிவித்தால் மிக பயனுள்ளதாக இருக்கும் என்றும், அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வேறொரு வார விடுமுறை நாளை பணி நாளாக அறிவிக்கலாம் என்றும கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Deepavali