ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

களைக்கட்டிய ஆவின் தீபாவளி விற்பனை..கடந்த ஆண்டை விட 40% அதிகம்..

களைக்கட்டிய ஆவின் தீபாவளி விற்பனை..கடந்த ஆண்டை விட 40% அதிகம்..

ஆவின் தீபாவளி சிறப்பு விற்பனை

ஆவின் தீபாவளி சிறப்பு விற்பனை

200 கோடி ரூபாய்க்கு ஆவின் இனிப்புகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தெரிவித்திருந்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பொதுமக்களிடையே மிகுந்த நம்பிக்கை மற்றும் வரவேற்பை பெற்றுள்ள ஆவின் பால் பொருட்கள், சுமார் 4.5 லட்சம் கிராமப்புற பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்த பால் மூலம் தயார் செய்யப்படுகிறது. அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில்கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விற்பனை விகிதத்தை அதிகப்படுத்தியுள்ளது ஆவின்.

  தீபாவளி பண்டிக்கைக்காக ஆவின் நிறுவனம் சார்பில் பல்வேறு புதிய வகை இனிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டது.குறிப்பாக, ஏற்கனவே உள்ள 275 பால், இனிப்பு வகை பொருட்களுடன், நெய் பாதுஷா, கருப்பட்டி அல்வா, நட்ஸ் அல்வா, காஜு கட்லி உள்ளிட்டவற்றுடன் புதிதாக 9 இனிப்பு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

  கடந்த ஆண்டு தீபாவளி பண்டிக்கைக்கு 82 கோடி 24 லட்சம் ரூபாய்க்கு ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்தாண்டு 200 கோடி ரூபாய்க்கு ஆவின் இனிப்புகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தெரிவித்திருந்தார்.

  Read More : கொட்டி தீர்த்த மழை... வைப்பர் இல்லாமல் தவித்த அரசு பேருந்து ஓட்டுநர்.. பயணிகள் திக்திக் பயணம்

  இந்நிலையில் தீபாவளி சிறப்பு விற்பனையானது தமிழகம் முழுவதும் சிறப்பாக நடைப்பெற்றது. தீபாவளி பண்டிக்கைக்கு இந்தாண்டு 200 கோடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.116 கோடிக்கு இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் 40% விற்பனை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Aavin, Deepavali, Tamil Nadu