முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ”தேர்தல் வருவதால் அமைதிப் பேரணி நடத்துகிறார்கள்” - அதிமுக மீது ஜெ.தீபா குற்றச்சாட்டு

”தேர்தல் வருவதால் அமைதிப் பேரணி நடத்துகிறார்கள்” - அதிமுக மீது ஜெ.தீபா குற்றச்சாட்டு

ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் தீபா மற்றும் மாதவன்

ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் தீபா மற்றும் மாதவன்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை முழுமையாக நடத்த வேண்டும் என்ற தீபா, போயஸ் கார்டனை உரிமை கோரும் விவகாரத்தை பொருத்தவரை ஏற்கனவே நீதிமன்றம் சென்றுள்ளதாகவும், சட்டப்போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில், அவரது அண்ணன் மகள் ஜெ. தீபாவும் அவரது கணவர் மாதவனும் அஞ்சலி செலுத்தினர்.

ஜெயலலிதாவின் 2-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை சார்பில் ஜெ. தீபா, அவரது கணவர் மாதவனுடன் மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அத்தை என்ற முறையில் அஞ்சலி செலுத்த வந்ததாக கூறினார்.

தேர்தல் வர குறுகிய காலமே உள்ளதால்தான் அதிமுக அமைதி பேரணி நடத்துவதாகவும், ஜெயலலிதா வழியை இந்த அரசு சரியாக பின்பற்றவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார். ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை முழுமையாக நடத்த வேண்டும் என்ற ஜெ. தீபா, போயஸ் கார்டனை உரிமை கோரும் விவகாரத்தை பொருத்தவரை ஏற்கனவே நீதிமன்றம் சென்றுள்ளதாகவும், சட்டப்போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தார். தேர்தலில் போட்டியிடுவது குறித்து கலந்து ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறினார்.

Also see...

First published:

Tags: J Deepa, Jayalalithaa