• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகம், ஆந்திராவில் கனமழைக்கு வாய்ப்பு

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகம், ஆந்திராவில் கனமழைக்கு வாய்ப்பு

கனமழை

கனமழை

தமிழகத்தின் சில பகுதிகள், ஆந்திராவின் தெற்கு கடற்கரையை ஒட்டிய பகுதிகள் மற்றும் ராயலசீமா ஆகிய பகுதிகளில் இன்று அதி தீவிர கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • Share this:
    வங்கக் கடலில் உருவாக காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்றுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வங்கக் கடலில் கடந்த 13ம் தேதி  உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவான தருணத்தில் ஆந்திரா கடல் பகுதிகள் அருகில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக செல்வதாக இருந்தது. 2 நாட்கள் முன் வட தமிழ்நாடு நோக்கி நகர்ந்தது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வரும் என கணிக்கப்பட்டது.

    தற்போது மீண்டும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் பெறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து நாளை வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடல் பகுதிகளை வந்தடையும்.

    குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும்போது மழையின் தீவிரம் வலுபெறக் கூடும் என்றும் இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழகம் மற்றும் ஆந்திர கடற்கரையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்றும் நாளை ராயலசீமா பகுதியில் கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதையும் படிக்க: தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று மிக கனமழை எச்சரிக்கை


    தமிழகத்தின் சில பகுதிகள், ஆந்திராவின் தெற்கு கடற்கரையை ஒட்டிய பகுதிகள் மற்றும் ராயலசீமா ஆகிய பகுதிகளில் இன்று அதி தீவிர கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: