ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பொங்கல் முடிந்து ஊரடங்கை தீவிரப்படுத்த முடிவு..?

பொங்கல் முடிந்து ஊரடங்கை தீவிரப்படுத்த முடிவு..?

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

கொரோனா, ஒமைக்ரான் வைரஸ் நோயை கருத்தில் கொண்டும் பொது மக்கள் நலன் கருதியும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக மாநிலத்தில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இதேபோல் வார இறுதிநாளான ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 9-ம் தேதி) முழு ஊரடங்கும் அமல்படுத்தப்படும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் 3.1.2022-ன் படி, 10.1.2022 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை வலுப்படுத்த தவறினால் நோய் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. பரவி வரும் உருமாறிய கொரோனா ஓமைக்ரான் வைரஸ் நோயை  கருத்தில் கொண்டும் பொது மக்கள் நலன் கருதியும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

அதன்படி, மாநிலம் முழுவதும்  இன்று முதல் வார நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலும் ஊரடங்கு (Night Curfew)  அமல்படுத்தப்படுகிறது. இந்த நேரத்தில் அனைத்து வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் போன்றவை செயல்பட அனுமதியில்லை. அத்தியாவசிய மற்றும் மருத்துவம் சார்ந்த பணிகளுக்கு மட்டுமே இரவு நேரத்தில் அனுமதி எனக் கூறப்பட்டுள்ளது. இதேபோல் வார இறுதிநாளான ஞாயிற்றுக்கிழமை (ஜன.9)  முழு ஊரடங்கும் அமல்படுத்தப்படும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: தமிழகத்தில் ஊரடங்கு அறிவிப்பு... எவற்றுக்கு அனுமதி? எவற்றுக்கு தடை?

நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன்,  மற்ற நாடுகளிலும் மாநிலங்களிலும் ஓமைக்ரான் பாதிப்பு எண்ணிகை அதிகரித்துள்ளது அதில் தமிழகம் மட்டும் விதிவிலக்காக இருக்காது எனவே ஏற்றத்தை குறைத்து பரவலை தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை. தமிழகத்தில் அடுத்த இரண்டு வாரங்களில் ஓமைக்ரான் பரவல் அதிகமாகி பின்னரே குறையும், இதை பொதுமக்கள் மனதில் வைத்துக்கொண்டு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

பொங்கல் திருநாள்

தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவுக்கு இன்னும் சில நாள்களே உள்ளது. சூரிய தேவனுக்கும், இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.  இந்நிலையில் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கை அறிவித்துள்ளது.  தமிழகத்தில் வரும் 10-ம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. தமிழக அரசின் நேற்றைய அறிவிப்பில் வார நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலும் ஊரடங்கு அமல்படுத்துவதாகவும் ஜனவரி 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு அமல்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: தமிழ்நாட்டில் இரவு ஊரடங்கு... பஸ் போக்குவரத்து இருக்குமா..?

ஜனவரி 10-ம் தேதிக்கு பின்னர் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு தொடருமா என்பது குறித்த அறிவிப்பு இல்லை. பொங்கல் வாரத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்தியதுபோல் தெரிகிறது. பொங்கல் பண்டிகையின் போது வெளிமாவட்டங்களில் பணியாற்றும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாடுவது வழக்கம். இரவு நேர ஊரடங்கின் போது பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு அமல்படுத்தினாலும் போக்குவரத்தில் பெரிய இடையூறாக இருக்காது. பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்று சேர்ந்துவிடலாம். ஜனவரி 14, 15 ஆகிய இரண்டு நாள்கள் வெள்ளி, சனிக்கிழமைகளில் வருகிறது. பொங்கல் முடித்து ஜனவரி 16-ம் தேதி மீண்டும் பணிக்கு வர இருப்பவர்கள் தான் இப்போது குழப்பத்தில் உள்ளனர். ஜனவரி,16-ம் தேதி ஞாயிற்றுகிழமையில் வருகிறது. அப்போது மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தினால் சொந்த ஊர்களில் இருந்து திரும்புபவர்கள் சிரமத்தை சந்திக்க வேண்டும் என்ற அச்சம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு பொங்கல் விழாவையொட்டி  கட்டுப்பாடுகளை தளர்த்தியதுபோல் தெரிகிறது.

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்குமா?

பொங்கல் விழாவின் சிறப்புகளில் ஜல்லிக்கட்டு போட்டியும் ஒன்று. தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் விதமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. அதுவும் மதுரையில் பொங்கல் விழாவையொட்டி நடத்தப்படும் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு போட்டியை காண வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகைபுரிவர். மதுரையில் பாரம்பரியமாக அவனியாபுரத்தில் 14-ம் தேதியும், 15-ம் தேதி பாலமேடு, 16-ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கும். இதில் 16-ம் தேதி ஞாயிற்றுகிழமை என்பதால் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்குமா என்ற  கேள்வி எழுந்துள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு தளர்வு இருக்குமா அல்லது கட்டுப்பாடுகள் தொடருமா என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஜனவரி 10 தேதி அல்லது அதற்கு முன்பாக அரசிடம் இருந்து தெளிவான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம். பொங்கல் வாரங்களில் கட்டுப்பாடுகளை தளர்த்தி விழா முடிந்து மீண்டும் ஊரடங்கை தீவிரப்படுத்தி கொரோனாவை கட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வருகிறது.

First published:

Tags: Corona, Covid-19, Jallikattu, Lockdown, Night Curfew, Pongal, Pongal festival, Tamilnadu