சுருக்குமடி வலைக்கு தடைவிதித்ததை கண்டித்து தேர்தலை புறக்கணிக்க முடிவு: மீனவர்கள் தீர்மானம்

கோப்புப் படம்

சுருக்குமடி வலையைப் பயன்படுத்த மீனவர்களை அனுமதிக்குமாறு தமிழக அரசுக்கு மீன்வள அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

 • Share this:
  நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் உள்ள 20 ஆயிரம் மீனவர்கள் 150-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில், தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி கடலில் மீன்பிடிக்கக் கூடாது என தமிழக அரசு தடையாணை பிறப்பித்தது.

  இந்நிலையில் சுருக்குமடி வலைக்கான தடையை நீக்க வலியுறுத்தி, தேர்தலை புறக்கணிக்கப் போவதாக, சீர்காழி அருகே 9 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். மேலும், ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தையும் நடத்தினர். இந்நிலையில், மீன்வளத் துறை அமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக் குழு உறுப்பினரும், உத்தரப்பிரதேச எம்.பியுமான பிரவீன் குமார் நிஷாத், சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சனை சந்தித்துப் பேசினார்.

  மேலும் படிக்க... கொரோனா தடுப்பு மருந்துகள் எவ்வளவு நாள் பாதுகாப்பு வழங்கும் ?

  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடலோர மாவட்டங்களில் வசிக்கும் மீனவர்கள் சுருக்குமடி வலையைப் பயன்படுத்த மாநில அரசு விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார். சுருக்குமடி வலையை பயன்படுத்த மத்திய அரசு தடைவிதிக்கவில்லை என்றும், கட்டுப்பாடுகளுடன் சுருக்குமடி வலையைப் பயன்படுத்த தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் அவர் கூறினார். இதையடுத்து, இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் பிரவீன் குமார் நிஷாத் தெரிவித்தார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: