Home /News /tamil-nadu /

நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது யார் ஆட்சியில்? - சட்டசபையில் காரசார விவாதம்

நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது யார் ஆட்சியில்? - சட்டசபையில் காரசார விவாதம்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

TN Assembly | நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது யார் ஆட்சியில் என்ற காரசார விவாதம் சட்டப்பேரவையில் இன்று நடந்தது.

சட்டப்பேரவையில் இன்று, பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித் தீர்மானத்தின் மீது பேசிய, அதிமுக உறுப்பினர் கே.பி.அன்பழகன், கடந்த 2016ல் டெல்லியில் நடைபெற்ற மாநில ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சார்பில் வாசிக்கப்பட்ட அறிக்கையில், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டுமென வலியுறுத்தியதாகவும், அதன் தொடர்ச்சியாகவே மருத்துவ மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு, கடந்த 2 ஆண்டுகளில் 800 மாணவர்கள் பயன்பெற்றதாக, தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு சட்ட மசோதாவை ஆளுநர் கிடப்பில் போட்டபோது, அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் தற்போதைய முதலமைச்சர் முன்னெடுத்த எழுச்சி போராட்டத்தின் காரணமாகவே சட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்ததாக தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, நான் முதல்வராக இருந்தபோது அந்த சட்டத்திற்கு கையெழுத்திட்டேன். எங்கள் ஆட்சியிலேயே அது நிறைவேற்றப்பட்டது எனத் தெரிவித்தார்.

பின்னர் மீண்டும் பேசிய அதிமுக உறுப்பினர் கேபி அன்பழகன், அரசு என்பது ஒரு தொடர் நடவடிக்கை என்றும், 2004ம் ஆண்டு மாநிலத்தில் நடைமுறையில் இருந்த நுழைவுத் தேர்வை ரத்து செய்ய அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அரசாணை வெளியிட்டதாகவும், அதன் தொடர்ச்சியாகவே திமுக அரசு நடைமுறைப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

அப்போது மீண்டும் குறுக்கிட்டு பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நீங்கள் அரசாணை வெளியிட்டீர்கள், அதன் தொடர்ச்சியாக நீதிமன்றத்திற்கு சென்று தடையும் வாங்கினீர்கள், ஆனால் திமுக ஆட்சியமைந்த பின், அதற்காக குழு அமைத்து அதன் பரிசீலனையின்படி நுழைவுத் தேர்வை ரத்து செய்தது கலைஞர் தான், கலைஞர் தான், கலைஞர் தான் என தெரிவித்தார்.
Published by:Ramprasath H
First published:

Tags: ADMK, DMK, MK Stalin, TN Assembly

அடுத்த செய்தி