சென்னை வெள்ளம் - சட்டப்பேரவையில் காரசார விவாதம்

தமிழக சட்டமன்றம்

2015 ஆம் ஆண்டு சென்னையில் வெள்ளம் ஏற்பட காரணம் என்ன என்பது குறித்து சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.

  • Share this:
2015 ஆம் ஆண்டு சென்னையில் வெள்ளம் ஏற்பட காரணம் என்ன என்பது குறித்து தமிழக சட்டப்பேரவையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது.

சட்டப்பேரவையில் நீர்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவதாம் நடைபெற்றது அப்போது, திமுக உறுப்பினர் நந்தகுமார் பேசுகையில், அதிமுக ஆட்சியின் போது கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாததே 2015 ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கிற்கு காரணமாக அமைந்தது என்று கூறினார்.

அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரி மட்டுமல்லாது, அதற்கு கீழ் நூறு ஏரிகள் இருக்கின்றன. அந்த ஏரிகள் நிரம்பியதால் தால் நீர் வெளியேறியது” என்றார்.

அதற்கு திமுக உறுப்பினர் நந்தகுமார், உரிய நேரத்தில் திறந்து விடப்படாததால் செம்பரம்பாக்கம் ஏரி உடைந்து நீர் வெளியேறியது” என்று கூறினார்.

அவருக்கு பதிலளித்தத எதிர்க்கட்சித்தலைவர், “செம்பரம்பாக்கம் ஏரி உடையவில்லை, அணை நிரம்பியதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டது”  என்றார்.

அப்போது பேசிய காங்கிரஸ் செல்வ பெருந்தகை, “செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க நான்கு நாட்களாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் முதலமைச்சரின் உத்தரவுக்காகக் காத்திருந்தனர், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ஒரே நாளில் அதிகளவு நீர் வெளியேற்றப்பட்டது.” என்றார்.

அதற்கு பதிலளித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர், அணைகளோ ஏரிகளோ நிரம்பும் போது திறந்து விடுவது வழக்கமான நடைமுறைதான். முதலமைச்சரின் உத்தரவுக்காக காத்திருக்கவில்லை.

மழை காலங்களில், பேரிடர் காலங்களில் அணை நிரம்பும் போது அணையை திறக்க அதிகாரிகளே முடிவு எடுக்கலாம்.” என்று கூறினார்.

சென்னை வெள்ளம் 2015


நிதியமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன், “2015ஆம் ஆண்டு தணிக்கை குழு அறிக்கை சட்டப்படியும், மரபுப்படியும் வைக்க வேண்டும். ஆனால் வைக்கப்படவில்லை. அப்போது திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது சட்டசபையில் கேள்வி கேட்டது, அப்போது, அளுங்கட்சி தணிக்கை குழு வழங்கிய அறிக்கையில் உடன்பாடு இல்லை.

Must Read : பொன்விழா நாயகன் : சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதைக் கேட்டு கண்கலங்கிய துரைமுருகன்

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, தணிக்கை குழு அறிக்கை வெளியிடப்பட்டது. 2015 சென்னையில் வெள்ளம் வந்தற்கு இரண்டு காரணங்கள் தணிக்கை குழு அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. 2015க்கு முன்னர் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறைகூட, மாநில பேரிடர் மேலாண்மை குழு கூட்டப்பட வில்லை. அதனால் அவர்களுக்கு விதிமுறை தெரியவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அடுத்ததாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்த போது அதை திறப்பதற்கு முதலமைச்சரிடம் அனுமதி வரவில்லை. அதனால் தான் செம்பரம்பாக்கம் ஏரி அது ஒரே நாளில் திறந்துவிடப்பட்டது என அப்போது ஒன்றிய தணிக்கை குழு அறிக்கையில் வெளியிடப்பட்டது.” என்று கூறினார்.
Published by:Suresh V
First published: