தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இன்று இந்து சமய அறநிலைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று பேசிய
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் நத்தம் விசுவநாதன், முதலமைச்சர் பொதுவானவர். எல்லா மதத்திற்கும் சம்பந்தப்பட்டவர், மற்ற எல்லா மதத்திற்கும் வாழ்த்து சொல்லும் போது
தீபாவளிக்கு ஏன் வாழ்த்து சொல்வது இல்லை என கேள்வி எழுப்பினார்.
இந்த கருத்திற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, சட்டமன்ற உறுப்பினர் கூறியதில் தவறு எதுவும் இல்லை. மரபிற்கு எதிராக பேசவில்லை. முதல்வர் பொதுவானவர், அனைத்து மதத்திற்கும் சம்பந்தப்பட்டவர், எல்லா பண்டிகைக்கும் வாழ்த்து கூறும் முதல்வர் தீபாவளிக்கு ஏன் கூறுவதில்லை என கேள்வி எழுப்பியதில் என்ன தவறு உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து பேசும்போது, இன்று திட்டமிட்டு திமுக ஆன்மீகத்துக்கு எதிரான கட்சி என்று சித்தரிக்கும் நிகழ்வு நடக்கிறது. அதைத்தான் எதிர்கட்சி உறுப்பினர் விஸ்வநாதன் பேசியிருக்கிறார்.
அதற்கெல்லாம் நாங்கள் அடிபணிந்து போய்விட மாட்டோம். இது தந்தை பெரியார் ஆட்சி. அறிஞர் அண்ணா உருவாக்கிய ஆட்சி. தலைவர் கலைஞர் வழிநடத்திவரும் ஆட்சி. திராவிட மாடல் ஆட்சி. கூட்டணிக்கே மத சார்பற்ற கூட்டணி என்று தான் பெயர் வைத்து தேர்தலை சந்தித்தோம். அதில் சந்தேகம் வேண்டாம் என தெரிவித்தார்.
Must Read : மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக ரத்தினவேல் மீண்டும் நியமனம் - அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவிப்பு
சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் இந்த விவகாரத்தில் பேசும்போது, ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற வாக்கிற்கு ஏற்ப அனைவரும் ஒரே பாதையில் செல்ல வேண்டும் என்று கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.