முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வேலை எதுவும் நடைபெறவில்லை -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வேலை எதுவும் நடைபெறவில்லை -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மதுரை எய்ம்ஸ்

மதுரை எய்ம்ஸ்

மத்திய அரசால் அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எந்த ஒரு வேலையுமே நடக்கவில்லை.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நாள் முதல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் எந்த ஒரு வேலையும் நடைபெறவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழக சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மானியக்கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய அதிமுக உறுப்பினர் கோவிந்தசாமி, அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவந்த திட்டங்கள் மற்றும் சாதனைகளை சுட்டிக்காட்டி பேசும் போது மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை பெற்றுத்தந்தது அதிமுக தான் எனவும் பேசினார்.

அதற்கு பதிலளித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அனுமதியை பெற்றதோடு ஒரு போர்டு கூட வைக்கவில்லை என குற்றம்சாட்டினார்.

மேலும், தமிழ்நாடு மட்டுமல்லாது பல மாநிலங்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை ஒன்றிய அரசு வழங்கியதாகவும், அதில் பல மாநிலங்களில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, சில மாநிலங்களில் பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவும் கூறிய அமைச்சர் அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எந்த ஒரு வேலையுமே நடக்கவில்லை எனவும் பதிலளித்தார்.

மேலும், திமுக ஆட்சியமைத்த பிறகு பிரதமரை நேரிலும், கடிதம் மூலமாகவும் வலியுறுத்திய காரணத்தினால், கடந்த மாதம் 3 ஆம் தேதி குழு அமைக்கப்பட்டு மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் ஆய்வு நடைபெற்றிருப்பதாகவும அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்தார்.

Must Read : முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் தெரிவிக்க நேரில் வரவேண்டாம் - ஆன்லைனில் அனுப்பு வேண்டுகோள்

மேலும், கடந்த 2020-21ஆம் ஆண்டில் 3 லட்சத்து 80 ஆயிரத்து 622 தாய்மார்களுக்கு கருத்தடை வளையம் பொருத்தப்பட்டுள்ள தாகவும், நடப்பு ஆண்டில் 4 லட்சம் தாய்மார்களுக்கு கருத்தடை வளையம் பொருத்த உத்தேசிக்கப்பட்டு இருப்பதாகவும் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Aiims Madurai, Ma subramanian, TN Assembly