Home /News /tamil-nadu /

அம்மா மினி கிளினிக் விவகாரம்: சட்டப்பேரவையில் காரசார விவாதம்

அம்மா மினி கிளினிக் விவகாரம்: சட்டப்பேரவையில் காரசார விவாதம்

தமிழக சட்டப் பேரவை

தமிழக சட்டப் பேரவை

தற்காலிகமாக பெயரளவில் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா மினி கிளினிக் கழிவறையில் செயல்பட்டது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசிய நிலையில் சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கடந்த அதிமுக ஆட்சியில் அம்மா மினி கிளினிக் ஒரு தற்காலிக திட்டமாகத்தான் நிறைவேற்றப் பட்டதாகவும், தற்போது இல்லம் தேடி மருத்துவ திட்டம் நிறைவேற்றப் பட்டுள்ளதால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டதாகவும் தமிழக சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறினார். இந்த பிரச்னையில் அதிமுக - திமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

    தமிழக சட்டப்பேரவையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய ஒரத்தநாடு சட்டமன்ற அதிமுக உறுப்பினர் வைத்திலிங்கம், கிராமப்புறங்களில் அதிக அளவில் பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்த அம்மா மினி கிளினிக்குகளை தமிழக அரசு மூடிவிட்டதாக புகார் தெரிவித்தார்.

    அதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், கடந்த ஆட்சியில் 2,000 மினி கிளினிக்குகளில் 1,820 கிளினிக்குகளில் தான் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியமர்த்தபட்டதாகவும், பல்வேறு இடங்களில் கழிவறைகள், மயானங்களில் அம்மா கிளினிக்குகள் தொடங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் எதிர்கட்சி உறுப்பினர்களுக்கும் அந்த இடங்களை நேரில் அழைத்து சென்று காட்ட தயாராக இருப்பதாக கூறினார்.

    அப்போது குறுக்கிட்ட எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கழிவறைகளில் அம்மா கிளினிக் ஆரம்பிக்கப்பட்டதாக கூறுவது, அந்த திட்டத்தை சிறுமை படுத்துவதாக உள்ளதாகவும், ஆகையால் அமைச்சர் சொன்ன கருத்துக்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கூறினார்.

    அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆதரத்தோடு பேசியதாகவும், தேவைபட்டால் இன்று மாலையே அந்த இடங்களை அவர் காட்ட தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

    Must Read : ஊரடங்கில் போட்டித் தேர்வுகளுக்கு செல்பவர்களுக்கு அனுமதி - தமிழக அரசு

    பின்னர் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், கடந்த ஆட்சியில் அம்மா கிளினிக் ஓராண்டிற்காக தான் தொடங்கப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிட்டுள்ளதை சுட்டிக்காட்டியதுடன், கடந்த ஆட்சியில் தற்காலிக ஏற்பாடாகத்தான் அம்மா மினி கிளினிக் ஆரம்பிக்கப்பட்டதாக விளக்கமளித்துப் பேசினார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Edappadi Palaniswami, Ma subramanian, MK Stalin, TN Assembly

    அடுத்த செய்தி