மறைந்த முதலமைச்சர்கள் கருணாநிதியும், ஜெயலலிதாவும் இருக்கும் வரை தமிழகத்தில் நீட் வரவில்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருக்கும்போது தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேரவையில் தெரிவித்துள்ளார்.
மக்கள் நல்வாழ்வுத் துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, அதிமுக ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரிகள் கொண்டுவரப் பட்டதாகவும், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுமதி வாங்க பட்டதாகவும் கூறினார்.
அதற்கு பதிலளித்துப் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதி கொடுக்கப்பட்டதாகவும், அனுமதி கிடைக்கப்பட்ட மாநிலங்களில் மருத்துவமனை கட்டுமான பணிகள் முடிவுற்று உள்ளதாகவும் கூறினார். ஆனால் தமிழகத்தில் ஒரே ஒரு செங்கல் மட்டுமே எய்மஸ் மருத்துவமனைக்கு வைக்கப்பட்டதாகவும் அந்த செங்கலை உதயநிதி எடுத்து வந்து விட்டதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, நீட் தேர்வுக்கு எதிராக சட்டம் கொண்டுவரப்பட்டு தேர்வு நடத்தப்படதாது என்று திமுக கூறியிருந்த வாக்குறுதி என்னவாயிற்று என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியம், காங்கிரஸ் ஆட்சியில் நீட் கொண்டு வரப்பட்ட போது அப்போதைய முதலமைச்சர் கலைஞர் நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றதாக கூறினார். கலைஞர், ஜெயலலிதா ஆகியோர் முதல்வர்களாக இருந்த வரையில் நீட் தேர்வு தமிழகத்தில் வரவில்லை என்றும், எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோதுதான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதாக கூறினார்.
அப்போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி எழுந்து பேச முயற்சித்தார். இதனால் காங்கிரஸ் அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கு இடையே சிறிது வாக்குவாதம் நடைபெற்றது.

நீட் தேர்வு
தொடர்ந்து பேசிய அதிமுக உறுப்பினர் கோவிந்தசாமி, தேர்தல் வாக்குறுதியாக திமுக நீட் தேர்வுக்கு கொடுத்தது என்ன ஆனது என ஆவேசமாக பேசினார். அப்போது எழுந்த காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ்குமார், அதிமுக உறுப்பினர் பார்த்து கேள்வி எழுப்பியதால், அனைத்து அதிமுக உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Must Read : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வேலை எதுவும் நடைபெறவில்லை -அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அப்போது பேசிய விஜயதாரணி, காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது நீட் கொண்டு வரப்பட்டாலும் விரும்புகின்ற மாநிலங்கள் மட்டுமே தேர்வை நடத்திக்கொள்ளலாம், என்று கூறியிருந்ததை குறிப்பிட்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.