ஆறுமுகசாமி ஆணையம் - சட்டமன்றத்தில் காரசார விவாதம்

ஆறுமுகசாமி ஆணையம் - சட்டசபை

அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.

 • Share this:
  ஆறுமுகசாமி ஆணையம் அமைத்து மூன்று ஆண்டுகளாகியும் விசாரணை முடிக்கப்படவில்லை. விசாரணை நடத்தி குற்றமானவர்களை கூண்டில் ஏற்றவேண்டும் என்று திமுக உறுப்பினர் மார்க்கெண்டேயன் கூறினார்.

  அப்போது, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், சட்டப் பேரவையில் ஆறுமுகசாமி ஆணையம் குறித்து திமுக உறுப்பினர் மார்க்கெண்டையன் கூறிய கருத்தை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.

  இதற்கு பதில் அளித்த துணை சபாநாயகர், உறுப்பினர் மேலோட்டமாக தான் பேசினார் என்பதால் அவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்க தேவையில்லை என்றார். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து அவையில் விவாதிக்க கூடாது என்பதால், அவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வன் வலியுறுத்தினார்.

  நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து அவையில் விவாதிக்க கூடாது என்பது விதி. ஆனால், பெயரை குறிப்பிடாமலும் வழக்கின் தன்மை குறித்து பொதுவாகத் தான், உறுப்பினர் பெயர் குறிப்பிடாமல் பேசினார் என்று அவை முன்னவர் துரைமுருகன் பதில் அளித்தார். அப்போது, பொதுவாக பேசியதால் அவைக்குறிப்பில் இடம்பெறலாம் என்று துணை சபாநாயகர் பிச்சாண்டி தெரிவி்ததார்.

  இந்நிலையில், அதிமுக உறுப்பினர் ஆர்.பி. உதயகுமார் கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், அதிமுக ஆட்சிகாலத்தில் முதியோர் உதவித்தொகை முறையாக வழங்கப்படவில்லை எனவும் இந்த திட்டத்தில் தகுதி இருந்த பலர் நீக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

  Must Read : தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்து திட்டங்களும் நிச்சயம் நிறைவேற்றப்படும் - மு.க.ஸ்டாலின்

  அதற்கு பதிலளித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சிக் காலத்தை விட 60% கூடுதலாக அதிமுக ஆட்சியில் முதியோர் உதவித்தொகை வழங்கப் பட்டுள்ளதாக கூறினார். மேலும், அதிமுக ஆட்சிக்காலத்தில் தகுதி வாய்ந்த அனைவரும் முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டதாகவும் தகுதி இல்லாதவர்கள் மட்டுமே இந்த திட்டத்திலிருந்து நீக்கப்பட்டதாக கூறினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Suresh V
  First published: