• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தேசிய கொடி ஏற்றுவதில் திமுக-அதிமுகவினரிடையே மோதல்... சாலை மறியல்

தேசிய கொடி ஏற்றுவதில் திமுக-அதிமுகவினரிடையே மோதல்... சாலை மறியல்

சாலை மறியல்

சாலை மறியல்

திமுகவினர் சுமார் 500க்கும் மேற்பட்டோர் ஆரணி வேலூர் சாலையில் சாலைமறியிலில் ஈடுபட்டனர்.

  • Share this:
    ஆரணி அருகே தேசிய கொடியை ஏற்றுவதில் திமுக அதிமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருதரப்பினரையும் பள்ளி வளாகத்தில் அனுமதிக்காமல் பள்ளி தலைமையாசிரியை வைத்து தேசிய கொடி ஏற்றபட்டதால் இதனை கண்டித்து திமுகனவினர் சுமார் 500பேர் சாலைமறியிலில் ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள சேவூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு பள்ளியில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அங்கே, ஊராட்சி மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த ஷர்மிளா தரணி என்பவர் இருந்து வருகின்றார். பள்ளி பெற்றோர் கழக ஆசிரியர் தலைவராக அதிமுகவை சேர்ந்த சம்பத் என்பவர் பதவி வகித்து வருகின்றார். அத்துடன், அரசு பள்ளியில் யார் தேசிய கொடி ஏற்றுவது என்று கடந்த 2 ஆண்டுகளாக மோதல் போக்கும் இருந்து வருகின்றன.

    இதனால் கடந்த ஆண்டு பள்ளி தலைமையாசிரியை மீனாட்சி என்பவர் கொடியேற்றினார். இந்நிலையில் இன்று சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளியியல் 72வது குடியரசு நாள் என்பதால் திமுகவை ஊராட்சி மன்ற தலைவர் ஷர்மிளா தரணி தேசிய கொடி ஏற்ற பள்ளிக்கு வருகை புரிந்தார்.

    திமுக தலைவர் தேசிய கொடி ஏற்ற பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சம்பத் மற்றும் அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பள்ளி வளாகத்தில் ஆரணி டி.எஸ்.பி கோட்டீஸ்வரன் தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கபட்டு பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது திமுக - அதிமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் இருதரப்பினரை போலீசார் சமரசம் செய்து இருதரப்பினரிடையே தனிதனியாக ஆலோசனை நடத்தினார்கள். திமுக தரப்பில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தரணிவேந்தன் வந்தவாசி எம்.எல்.ஏ அம்பேத்குமார் முன்னாள் மாவட்ட செயலாளர் சிவானந்தம் உள்ளிட்ட தரப்பில் பள்ளி தலைமையாசிரியை தேசிய கொடி ஏற்ற இருதரப்பினர் சம்மதம் தெரிவித்தனர்.

    பள்ளி உள்ளே இதுதரப்பினர் செல்லும் போது, இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நிலைமை கட்டுகடங்காமல் போனதால், போலீசார் பள்ளி கேட்டின் கதவை பூட்டினர். பள்ளி உள்ளே தலைமையாசிரியை மீனாட்சி தேசிய கொடி ஏற்றி வைத்தார். இதனால் ஆத்திமடைந்த திமுகவினர் மாவட்ட பொறுப்பாளர் தரணிவேந்தன் தலைமையில் திமுகவினர் சுமார் 500க்கும் மேற்பட்டோர் ஆரணி வேலூர் சாலையில் சாலைமறியிலில் ஈடுபட்டனர்.

    இதனால் இந்த பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் திமுகவினர் சமரசம் செய்ததால் திமுகவினர் சாலைமறியலை கைவிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: