தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ரயில் தண்டவாளங்களை கடக்கும் போது ஏற்படும் மரணங்கள் மற்றும் தற்கொலை விவரங்களை ரயில்வே காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி தண்டவாளங்களை கடக்கும் போது கவனக்குறைவால் ரயிலில் மோதி அடிபட்டு இறப்பது கடந்த 2020, 2021 ஆண்டுகளை விட 2022 ல் அதிக அளவில் அதிகரித்துள்ளது என ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது. அதேபோல ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை கணிசமான அளவில் கடந்த ஆண்டுகளை விட அதிகரித்துள்ளது என ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது.
ரயில்வே தண்டவாளங்களை கடக்கும்போதும் மற்றும் அத்துமீறி நுழைவதால் ஏற்படும் மரணங்களின் விவரங்கள்:
ஆண்டு | ஆண்கள் | பெண்கள் | மொத்தம் |
2018 | 1813 | 278 | 2091 |
2019 | 1837 | 260 | 2097 |
2020 | 776 | 145 | 921 |
2021 | 1123 | 190 | 1313 |
2022 | 1600 | 256 | 1856 |
கடந்த 2020 மற்றும் 2021 ஆண்டுகளை ஒப்பிடுகையில் 2022 - ம் ஆண்டு கவன குறைவாக மற்றும் அத்துமீறி தண்டவாளங்களை கடக்க முற்படும்போது ரயிலில் அடிபட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளதாக தமிழக ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது.
அதே போல ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டுகளை விட 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு அதிகரித்துள்ளது என ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது.
ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட விவரங்கள் :
ஆண்டு | ஆண்கள் | பெண்கள் | மொத்தம் |
2018 | 49 | 13 | 62 |
2019 | 83 | 24 | 107 |
2020 | 71 | 13 | 84 |
2021 | 204 | 18 | 222 |
2022 | 186 | 24 | 210 |
2018, 2019, 2020 ஆண்டுகளை காட்டிலும் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது என ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த 2022 ஆம் ஆண்டு 488 அடையாளம் காணப்படாத சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது. ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்வோரை தடுப்பதற்காக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது. அதே வேளையில் பொதுமக்கள் கவனக்குறைவாக தண்டவாளங்களை கடப்பது மற்றும் அத்துமீறி தண்டவாளங்கள் கடப்பது தண்டனைக்குரிய குற்றமென ரயில்வே காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Death rate increased, Death toll, Railway, Tamil Nadu