கொரோனா மூன்றாவது அலையில் உயிரிழப்புகள் அதிகம் இருக்கும்... தப்பிக்க கைலாசா வாருங்கள் - நித்தியானந்தா

நித்தியானந்தா

கொரோனா மூன்றாவது அலையில் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும் என்று நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.

  • Share this:
    சீனாவின் ஊஹான் மாகாணத்தில் 2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போதுவரை தொடர்ந்துவருகிறது. கொரோனா பாதிப்பின் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் பெரும் பாதிப்புகளைச் சந்தித்து திணறிவருகின்றன. கொரோனா முதல்அலை முடிந்து தன்னிலை அடைவதற்குள் இரண்டாவது அலை தாக்கியது. அதற்குள் உலக நாடுகள் கொரோனா தடுப்பூசி போடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    தற்போது, உலக நாடுகள் மெல்லமாக இயல்புநிலையை நோக்கிநகர்ந்துவருகின்றன. இந்தநிலையில், மூன்றாவது அலையின் தொடக்கத்தில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை செய்துள்ளது.

    இந்தநிலையில், நித்தியானந்தா வெளியிட்டுள்ள காணொலியில், ‘இந்தியாவில் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதும், கூட்டமாக செல்வதையும் பார்க்கும்போது அவர்கள் கொரோனா 3-ம் அலையை வரவேற்பது போல உள்ளது. டெல்டா பிளஸ், லம்டா வைரஸ்கள் மிகவும் மோசமானவை. இந்த வைரஸ்கள் கொரோனாவின் அப்டேட் வெர்சனாக வந்துள்ளது. 3-ம் அலை மோசமானதாக இருக்கும். கொரோனா, மருத்துவ உள்கட்டமைப்பை அதிகமாக பாதித்துள்ளது. இதனால் மருத்துவ துறை மட்டுமல்ல சமூக உள்கட்டமைப்பு, நிர்வாக கட்டமைப்பு என அனைத்தும் பாதிக்கப்படுகிறது.

    எனவே நான் எனது பக்தர்களுக்கு எச்சரிக்கையாக சொல்கிறேன். வீட்டிலேயே இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். இல்லையென்றால் ஆதி கைலாசாவுக்கு வந்து விடுங்கள். இங்கு தான் ‘மல்டி லேயர் குவாரண்டைன்’ வசதி உள்ளது. ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளில் சமூக கட்டமைப்பு சரியாக இல்லை. இங்கு மக்கள் கூட்டமாக செல்கிறார்கள். மற்றவர்களை தொட்டு பேசுகிறார்கள். தொற்று நோயை தடுப்பதில் இந்தியாவில் சமூக உள்கட்டமைப்பு தோற்று போய் உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மக்கள் கூட்டம், கூட்டமாக செல்கிறார்கள். குடும்பத்தோடு ஷாப்பிங் செல்கிறார்கள். லக்சரி கடைகளுக்கு செல்கிறார்கள். மூன்றாவது அலையில் உயிரிழப்புகள் மிகவும் அதிகமாக இருக்கும். நான் எனது பக்தர்களுக்கும், சன்னியாசிகளுக்கும், பிரம்மசாரிகளுக்கும் சொல்கிறேன். உங்களுக்கு குடும்பத்தினர் அல்லது நீங்கள் மிகவும் நேசிப்பவர்களை ஆதி கைலாசாவுக்கு அழைத்து வாருங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published: