விருதுநகர் பட்டாசு ஆலை தீ விபத்து: உயிரிழப்பு 8 ஆக அதிகரிப்பு

தகவலறிந்து மூன்று வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், போராடி தீயை அணைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விருதுநகர் பட்டாசு ஆலை தீ விபத்து: உயிரிழப்பு 8 ஆக அதிகரிப்பு
தீப்பிடித்து எரிந்த பட்டாசு ஆலை
  • Share this:
விருதுநகரில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 9 பேர் படுகாயமடைந்தனர்.

சாத்தூர் அருகேயுள்ள சிப்பிப்பாறையில், ராஜம்மாள் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில், நேற்று மதியம் எதிர் பாராதவிதமாக பட்டாசுகளில் உராய்வு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட வெடி விபத்ததில், இரண்டு அறைகள் தரைமட்டமாகின.

இதில் அங்கிருந்த 6 பேர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.


படுகாயமடைந்த மேலும் 9 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்துக்குள்ளான பட்டாசு ஆலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் முதற்கட்ட விசாரணையில் சட்டவிரோதமாக பேன்ஸி ரக பட்டாசுகள் உரிய பாதுகாப்பு இன்றி தயாரிக்கப்பட்டு வந்ததாக தெரியவந்துள்ளது.

தகவலறிந்து மூன்று வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், போராடி தீயை அணைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also see...

 
First published: March 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading