ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

'நமது அம்மா' பத்திரிகை வெளியீட்டாளர் சந்திரசேகர் மீது கொலை மிரட்டல் வழக்கு

'நமது அம்மா' பத்திரிகை வெளியீட்டாளர் சந்திரசேகர் மீது கொலை மிரட்டல் வழக்கு

சந்திரசேகர்

சந்திரசேகர்

கோவையில் திமுகவினர்  கொடுத்த புகாரின் பேரில் "நமது அம்மா" பத்திரிகையின் வெளியீட்டாளரும், அதிமுக பிரமுகருமான வடவள்ளி சந்திரசேகர் மீது இரு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கோவை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைரணி செயலாளராக இருப்பவர் வடவள்ளி சந்திரசேகர். இவர் அதிமுக நாளேடான நமது அம்மா பத்திரிகையின் வெளியீட்டாளராகவும், மாநகராட்சி ஒப்பந்ததாரராகவும் இருந்து வருகின்றார். இவர் சமீபத்தில் நடந்த அதிமுக கூட்டத்தில் திமுக தலைவர் குறித்தும் , திமுக வேட்பாளர்கள் குறித்தும் பேசிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

அந்த வீடியோ காட்சிகளுடன் திமுக வழகறிஞர்கள் தொண்டாமுத்தூர் தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில் அரசனிடம் புகார் அளித்து இருந்தனர். அந்த புகார்மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில் அரசன்  வடவள்ளி துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார்.

.அந்த புகார் மனுவில் "ஸ்டாலின் அஙர்களுக்கு சொல்லி கொள்கின்றேன். கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கும் ஸ்டாலின் ஆட்டை அனுப்பி வைத்துள்ளார், அந்த ஆடுகளை கண்டிப்பாக இந்த தேர்தல் முடிந்தவுடன், வெற்றி விழாவின் போது கிடா வெட்டி விருந்து வைப்போம் எனவும், அப்போது ஸ்டாலின் அனுப்பிய ஆடுகளை வெட்டுவோம் என அந்த வீடியோ காட்சிகளில்  வடவள்ளி சந்திரசேகர்  தெரிவித்துள்ளார்.

அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி தூண்டுதலின் பேரில் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதியை  வெட்டி கொலை செய்து பிரியாணி போடப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பதாகவும்,எனவே அமைச்சர்எஸ்.பி. வேலுமணி மீதும் வடவள்ளி சந்திரசேகர் உட்பட அவரது ஆட்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனையடுத்து திமுக வழக்கறிஞர்கள் தேர்தல் அதிகாரியிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில்  வடவள்ளி காவல் துறையினர்  காவல்துறையினர் அதிமுக பிரமுகர் சந்திரசேகர் மீது  2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். கொலை மிரட்டல் மற்றும் தகாத வார்த்தையில் கட்டுதல் ஆகிய இரு பிரிவுகளில் காவல்துறையினர் வடவள்ளி சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு மிக நெருக்கமான வடவள்ளி சந்திரசேகர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து இருப்பது கோவை மாவட்ட அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமாக இருப்பதுடன் மாநகராட்சியில் முக்கிய டெண்டர்கள் சந்திரசேகர் எடுத்து வருவதாக தொடர்ந்து பலவேறு புகார்கள் சந்திரசேகர் மீது வெளியாகி வந்த்து. மாவட்ட ஆட்சியர் மாற்றப்பட்டு புதிய ஆட்சியராக நாகராஜன் பொறுப்பேற்ற நிலையில் புகார்கள் மீது  நடவடிக்கைகள் வேகமெடுத்து வருவது குறிப்பிடதக்கது.

Published by:Vijay R
First published:

Tags: ADMK, DMK, TN Assembly Election 2021