Home /News /tamil-nadu /

கந்து வட்டி கொடுமையால் தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

கந்து வட்டி கொடுமையால் தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

கந்து வட்டி கடன் பிரச்சனை

கந்து வட்டி கடன் பிரச்சனை

Chennai : கடனை செலுத்த முடியாத காரணத்தினால் வட்டி அதிகரித்து 35 லட்சம் கட்ட சொல்லியும், வீட்டை தனது பேருக்கு எழுதி வைக்குமாறும் அந்த பெண் மிரட்டியுள்ளார்.

    கந்து வட்டி கடன் பிரச்னையில் கடந்த 7ஆம் தேதி சென்னை புளியந்தோப்பு பகுதியில் தீக்குளித்து சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    சென்னை பெரம்பூர் புளியந்தோப்பு பகுதியில் வசித்துவரும் சித்ரா கொரோனா காரணமாக கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு சிறுக சிறுக, ஏறத்தாழ 5 லட்சம் ரூபாய் வரை ரங்கநாயகி என்ற பெண்ணிடம் கடன் வாங்கியுள்ளார். கடனை செலுத்த முடியாத காரணத்தினால் வட்டி அதிகரித்து 35 லட்சம் கட்ட சொல்லியும், வீட்டை தனது பேருக்கு எழுதி வைக்குமாறும் அந்த பெண் மிரட்டியுள்ளார்.

    கந்துவட்டி கொடுத்த ரங்கநாயகியும் அவரது கணவர் சேகர், மகன்  உள்ளிட்டோர் கூட்டாக சேர்ந்து   மிரட்டியுள்ளனர். மேலும் சித்ராவையும், அவரது இரு மகள்களையும் மிரட்டியதன் காரணமாக மனமுடைந்து கடந்த 7ஆம் தேதி சித்ரா மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் புலியந்தோப்பு காவல் நிலையத்திற்க்கு தகவல் தெரிவித்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சித்ராவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமமனையில் உள்ள தீ காய தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சித்ரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    Must Read : முன்பதிவு பெட்டிகளில் ஏறி வடமாநிலத்தவர்கள் அட்டகாசம்.. பயணிகள் வாக்குவாதம் - செங்கல்பட்டில் 1 மணிநேரம் நிறுத்தப்பட்ட ரயில்

    இந்த சம்பவம் தொடர்பாக புளியந்தோப்பு காவல் துறையினர் இருவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர் -  அசோக்குமார். 
    Published by:Suresh V
    First published:

    Tags: Chennai, Crime News, Death, Loan, Woman

    அடுத்த செய்தி