ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணம்.. சக ஊழியரின் நிலை யாருக்கும் வரக்கூடாது என நன்கொடை வழங்கிய பணியாளர்கள்

நன்கொடை வழங்கிய சக பணியாளர்கள்

ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிர் இழப்புகளைத் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில், அனைவரும் ஒன்றிணைந்து, 100 சிலிண்டர்களுக்கு ஆக்ஸிசன் நிரப்ப மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கினார்கள்.

 • Share this:
  ஓசூரில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்த சக ஊழியரின் நிலை யாருக்கும் வரக்கூடாது என்று அவருடன் பணியாற்றிய ஊழியர்கள் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் பெற நன்கொடை அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  ஓசூர் சிப்காட் பகுதியில் ஆசிர்வாத் பைப் என்ற உலோக குழாய் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இதில் பணியாற்றி வந்த ராஜேஷ் என்ற ஊழியர் கொரோனா நோய் தொற்றுக்கு பாதிப்புக்குள்ளாகி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

  இதனால் வேதனையடைந்த அவருடன் பணியாற்றி வந்த ஊழியர்கள், இதுபோன்று ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிர் இழப்புகளைத் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில், அனைவரும் ஒன்றிணைந்து, 100 சிலிண்டர்களுக்கு ஆக்ஸிசன் நிரப்ப மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கினார்கள்.

  100 சிலிண்டர்கள் ஆக்சிஜன் நிரப்புவதற்கான தொகையான 35 ஆயிரத்து 865 ரூபாய்க்கான காசோலையை ஓசூர் வருவாய் கோட்டாட்சியர் குணசேகரன் மற்றும் ஓசூர் அரசு தலைமை மருத்துவர் டாக்டர் பூபதி ஆகியோர் முன்னிலையில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் நன்கொடையாக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
  Published by:Vijay R
  First published: