Home /News /tamil-nadu /

இட்லியில் செத்து கிடந்த தவளை.. ஷாக்கான வாடிக்கையாளர்கள்

இட்லியில் செத்து கிடந்த தவளை.. ஷாக்கான வாடிக்கையாளர்கள்

இட்லி

இட்லி

தனியார் ஹோட்டலில் இட்லிக்குள் இறந்த நிலையில் தவளை இருந்ததை கண்டு வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்.

    கும்பகோணத்தில் தனியார் உணவகத்தில்  இட்லியில் தவளை இறந்து கிடந்ததைக்கண்டு வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் முருகேசன் என்பவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முருகேசனை காண அவரது உறவினர் வந்துள்ளார். அரசு மருத்துவமனை அமைந்துள்ள பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் முருகேசனுக்கு நான்கு இட்லி பார்சல் வாங்கிச் சென்றுள்ளார். வார்டில் வைத்து முருகேசன் இட்லியை பிரித்து சாப்பிட முயன்ற போது இட்லிக்குள் இறந்த நிலையில் தவளை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உறவினரை அழைத்து விவரத்தை கூறியுள்ளார்.

    பார்சல் வாங்கிய இட்லியை  எடுத்துக்கொண்டு அந்த கடையின் உரிமையாளரிடம் காட்டி வாக்குவாதம் செய்துள்ளார். நீங்க கொடுத்த காச வாங்கிட்டு போங்க சத்தம் போடாதீங்கன்னு கடையின் உரிமையாளர் கூறியுள்ளார். கடையில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் இட்லியில் தவளை இருந்த விஷயத்தை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தனர். கடையில் இருந்தவர்களும் வாக்குவாதம் செய்யத் தொடங்கினார். இதன்காரணமாக அந்தப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. சாலையில் சென்ற பலரும் கடையை வேடிக்கை பார்த்தனர்.

    வாடிக்கையாளர் சத்தம் போட்டதையடுத்து கடையில் இருந்த இட்லி மாவு அனைத்தும் பொதுமக்கள் முன்னிலையில் கீழே கொட்டியுள்ளார். அவசர அவசரமாக கடையை பூட்டிவிட்டு புறப்பட்டுள்ளார். கடையில் இருந்த சிலர் தவளையுடன் இருந்த இட்லியை போட்டோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Food, Food poison, Idly podi, Kumbakonam

    அடுத்த செய்தி