• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஜி.கே.வாசன் வீட்டு முன் கிடந்த சடலம் - போலீஸ் விசாரணை

ஜி.கே.வாசன் வீட்டு முன் கிடந்த சடலம் - போலீஸ் விசாரணை

GK Vasan

GK Vasan

எம்.பியாக இருக்கும் ஜி.கே.வாசன் வீட்டின் முன்பு இறந்தவரின் சடலம் கிடந்ததால் டெல்லி போலீசார் பரபரப்படைந்துள்ளனர்.

  • Share this:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஜி.கே.வாசனின் இல்லத்துக்கு முன்பாக சாலையில் சடலம் ஒன்று கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னாள் மத்திய அமைச்சராகவும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜி.கே.வாசன், தற்போது மாநிலங்களவை எம்.பியாகவும் உள்ளார்.

ஜி.கே.வாசனுக்கு டெல்லியில் அசோகா சாலையில் உள்ள பட்டேல் சவுக் மெட்ரோ ரயில் நிலையம் அருகே அரசின் சார்பில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டின் வாசலில் நேற்று காலை சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இறந்து கிடந்தார். இது குறித்த தகவல் கிடைத்ததை அடுத்து போலீசார் அங்கு விரைந்து வந்து இறந்து கிடந்தவரின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தவர்.

எம்.பியாக இருக்கும் ஜி.கே.வாசன் வீட்டின் முன்பு இறந்தவரின் சடலம் கிடந்ததால் டெல்லி போலீசார் பரபரப்படைந்துள்ளனர். இறந்தவர் 60 வயது மதிக்கத்தக்க ஆண் என தெரியவந்தது.

Also Read:  கடனில் தத்தளிக்கும் டாப் 10 நாடுகளில் இடம்பிடித்த பாகிஸ்தான் – உலக வங்கி தகவல்

மேலும் அந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எப்படி அங்கு இறந்து கிடந்தார் என தெரியவில்லை. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கி நடத்தி வருகின்றனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: