முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி மாறன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்த உயர் நீதிமன்றம்

ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி மாறன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்த உயர் நீதிமன்றம்

ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி மாறன்

ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி மாறன்

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி மற்றும் திமுக எம்.பி தயாநிதி மாறன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • Last Updated :

கடந்த 2015 ம் ஆண்டு நவம்பர் 2 ம் தேதி சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு பதியப்பட்டது. அதேபோல, அரசு பணியாளர் தேர்வாணையம் முறைகேடு தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமாரை தொடர்புபடுத்தி பேசிய விவகாரத்தில் திமுக எம்பி தயாநிதி மாறன் மீதும் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில், தங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி ஆர்.எஸ் பாரதி மற்றும் தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்குகளின் விசாரணை நீதிபதி நிர்மல் குமார் முன்பு நடைபெற்று வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த அதிமுக ஆட்சியில் தொடரபட்ட அனைத்து அவதூறு வழக்குகளையும் ரத்து செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசாணை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கபட்டது.

top videos

    இதையடுத்து, நீதிபதி நிர்மல் குமார் ஆர்.எஸ்.பாரதி மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மீது பதியபட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    First published:

    Tags: Dayanidhi Maran, RS Barathi