தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவிக்கு வந்த நாள் முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார், கொரோனா 2ஆவது அலையை கட்டுப்படுத்தி வெற்றி பெற்றுள்ளோம் என மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் கூறியுள்ளார்.
சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதி ஏழுகிணறு பகுதியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் ஆகியோர் தமிழக அரசின் ரூ. 2000 மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன், “சொல்வதை செய்வோம் செய்வதை சொல்வோம் என்ற வாக்கிற்கு ஏற்ப கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கின் போது கடந்த ஆட்சியில் 5 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினோம். தற்போது ஊரடங்கு காரணமாக முதற் கட்டமாக கடந்த மாதம் 2 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரண வழங்கினோம் தற்போது 2 ஆயிரம் ரூபாய் மற்றும் மளிகை பொருட்களை அடங்கிய தொகுப்பை வழங்கி வருகிறோம்.
தமிழக முதலமைச்சர் பதவிக்கு வந்த நாள் முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்தி வெற்றி பெற்றுள்ளோம், சில மாவட்டங்களில் தொற்று அதிகமாக உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளோம்.
Must Read : ஒரே நாளில் 164.87 கோடி ரூபாய்க்கு மது விற்பனை - சென்னையை முந்திய மதுரை
அரசு கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பொதுமக்கள் விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். எய்ம்ஸ், ஜிப்மர் கல்லூரிகளில் நீட் தேர்வு இல்லை நுழைவுதேர்வு தனி தனியாக நடத்தப்படுகிறது. தமிழகத்திற்கும் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்.” என்று கூறினார்.
மே மாதம் முதற்கட்டமாக 2000 ரூபாய் கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டது. இதையடுத்து 14 வகை பொருட்களுடன் கூடிய மளிகைத் தொகுப்பும், இரண்டாம் தவணையாக 2000 ரூபாயும் இன்று முதல் தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகின்றது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CoronaVirus, COVID-19 Second Wave, Dayanidhi Maran, MK Stalin