முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பாஜக குறித்து அதிமுக புரிந்துகொள்ள வேண்டும்.. கூடா நட்பு கேடாய் முடியும் - தயாநிதி மாறன் விமர்சனம்

பாஜக குறித்து அதிமுக புரிந்துகொள்ள வேண்டும்.. கூடா நட்பு கேடாய் முடியும் - தயாநிதி மாறன் விமர்சனம்

தயாநிதி மாறன் எம்.பி. (கோப்புப் படம்)

தயாநிதி மாறன் எம்.பி. (கோப்புப் படம்)

பாஜக குறித்து அதிமுக புரிந்துகொள்ள வேண்டும் என்றும் கூடா நட்பு கேடாய் முடியும் என்றும் தி.மு.க எம்.பி தயாநிதிமாறன் கூறியுள்ளார்.

  • Last Updated :

சென்னை மண்ணடியில் தொகுதி மேம்பாட்டுநிதியில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிப்பிடம் கட்டும் பணியை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த 500க்கும் மேற்பட்டவர்களுக்கு திமுக-வின் ’ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் கீழ் மூன்றாம் கட்டமாக 14 வகையான மளிகை பொருட்களை நிவாரணமாக தயாநிதி மாறன் வழங்கினார்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் பாஜக இடையே தான் போட்டி என்பது நகைப்புக்குரியது என்றார். அதிமுக ஒன்றுமே இல்லையென்று அவர்களே தெரிவித்துள்ளார்கள். இதன் பிறகாவது பாஜக குறித்து அதிமுக புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறிய தயாநிதிமாறன், கூடா நட்பு கேடாய் முடியும் என்றார்.

Also read: சட்ட ஆலோசனையை பொறுத்து எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை - சென்னை காவல்துறை ஆணையர்

top videos

    தொடர்ந்து அவர் பேசுகையில், வி.பி.துரைசாமி குறித்த கேள்விக்கு எல்லாம் பதிலளிக்க விருப்பமில்லை; திமுக மத நல்லிணக்கத்திற்கானது, மதவெறியைத் தூண்டி அரசியல் செய்யும் இயக்கம் பாஜக, அதற்கு தமிழகத்தில் இடமில்லை என்றார். சென்னை விமான நிலையத்தில் தமிழ்ப் பேசும் அதிகாரியைப் பணியில் அமர்த்துவது காலம் கடந்த முடிவு. நம்மை அவமானப்படுத்தி, அசிங்கப்படுத்திய பின்னர் செய்துள்ளனர் என்றார்.

    First published:

    Tags: ADMK, Dayanidhi Maran