• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • முதலமைச்சர் பதவி வழங்கிய சசிகலாவிற்கே துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி: தயாநிதிமாறன்

முதலமைச்சர் பதவி வழங்கிய சசிகலாவிற்கே துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி: தயாநிதிமாறன்

முதலமைச்சர் பதவி வழங்கிய சசிகலாவிற்கே துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் விமர்சித்துள்ளார்.

  • Share this:
    சென்னை பங்காரு தெருவில் திமுக கிழக்கு மாவட்டம் சார்பில் கோலப்போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது மேடையில் பேசிய தயாநிதி மாறன், முதலமைச்சர் பழனிசாமி இறைவன் அருளால் முதலமைச்சர் ஆனேன் என்கிறார். ஆனால் அவர், தவழ்ந்து வந்து கால்களில் விழுந்து முதலமைச்சர் ஆனது வாட்ஸ் அப், பேஸ்புக் வழியாக பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றும் பழனிசாமிக்கு, சசிகலா போட்ட பிச்சையே முதலமைச்சர் பதவி என்றும் விமர்சித்தார்.

    ஆனால் பதவி வழங்கிய சசிகலாவிற்கே, துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி என்று குறிப்பிட்ட அவர், நீட் உள்ளிட்ட பல விஷயங்களில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே துரோகம் செய்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

    அதேபோல்,  துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தி ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகச் சொன்னார். 4 ஆண்டுகளாகியும் இதுவரை பதில் இல்லை. ஆறுமுகசாமி ஆணையம் 10 முறை சம்மன் அனுப்பியும் இதுவரை ஆஜராகவில்லை என்று தயாநிதிமாறன் தெரிவித்தார்.

    மேலும் படிக்க...Budget 2021: பட்ஜெட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட நிர்மலா சீதாராமனின் குழு உறுப்பினர்கள் இவர்கள் தான்!

    மேலும் தேர்தலுக்காகவே நினைவிடம் திறப்பது, மதுரையில் கோயில் கட்டுவது உள்ளிட்டவற்றை அதிமுக கையிலெடுப்பதாக அவர்தெரிவித்தார். நிகழ்ச்சியில். திமுக எம்.எல்.ஏ சேகர்பாபு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: