Home /News /tamil-nadu /

திமுக அமைச்சருக்கு எதிராக வந்த தீர்ப்பை திசை திருப்பவே லஞ்ச ஒழிப்பு சோதனை - இபிஎஸ் கண்டனம்!

திமுக அமைச்சருக்கு எதிராக வந்த தீர்ப்பை திசை திருப்பவே லஞ்ச ஒழிப்பு சோதனை - இபிஎஸ் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும், அதை சட்ட ரீதியாக எதிர்த்து போராடி வெல்வோம். எங்கள் மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை - எடப்பாடி பழனிசாமி

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    திமுக அமைச்சருக்கு எதிராக வந்த தீர்ப்பை திசை திருப்பவே லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெறுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி தொடர்பான  26 இடங்களிலும் சி.விஜயபாஸ்கர் தொடர்பான 13 இடங்களிலும் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஏற்கனவே இரு முறை எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில் , தற்போது மூன்றாவது முறையாக இந்த சோதனையானது நடத்தப்படுகின்றது. இதேபோல், முன்னாள் அமைச்சர், சி.விஜயபாஸ்கர் தொடர்பான 13 இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

    ALSO READ | கட்டப்படாத மருத்துவமனைக்கு சான்றிதழ்... முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்படும் ரெய்டின் பின்னணி

    இந்த சோதனைக்கு அதிமுகவில் இருந்து பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இந்த நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக அமைச்சருக்கு எதிராக வந்த உச்சநீதிமன்ற தீர்ப்பை திசை திருப்பவே முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

    மேலும், குரங்கின் கையில் பூமாலையும் கொள்ளிக்கட்டையும் கிடைத்தால் பூமாலையை புழுதியில் பிய்த்து எறியும், கொள்ளிக்கட்டையால் தன் தலையையும் சொரியும் ஊரையும் எரிக்கும். அந்த குரங்கின் நிலையில் இன்றைய திராவிட மாடல் ஆட்சியாளர்கள், திராவக மாடல் ஆட்சியாளர்களாக மாறி தீய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்’ என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

    முன்னாள், இந்நாள் திமுக அமைச்சர்கள் 13 பேர் மீதுள்ள முறைகேடு புகார்கள் குறித்த வழக்கினை விரைந்து நடத்தி அவர்கள் மீது முதல்வர் ஸ்டாலின் தண்டனை வாங்கித் தருவாரா என கேள்வி எழுப்பியுள்ள எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சியினர் மீது பொய்ப் புகார் புனைந்து தனது ஏவல்துறை மூலம் பழிவாங்கும் போக்கை கைவிட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களுக்கு இனியாவது நல்லது செய்வது பற்றி சிந்திக்க வேண்டும் என கூறியுள்ளார்.
    Published by:Anupriyam K
    First published:

    Tags: AIADMK, Cm edapadi palanisami, Directorate of Vigilance and Anti-Corruption, EPS

    அடுத்த செய்தி