முகப்பு /செய்தி /தமிழ்நாடு / காதலனுடன் திருமணமான புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் அனுப்பிய மகள்: மனமுடைந்த பெற்றோர் தற்கொலை!

காதலனுடன் திருமணமான புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் அனுப்பிய மகள்: மனமுடைந்த பெற்றோர் தற்கொலை!

ஒரே மகள் காதல் திருமணம் செய்து கொண்டதாக வாட்ஸ் அப்பில் அனுப்பிய திருமணமான போட்டோவை பார்த்து, மனமுடைந்த தந்தை, தாய் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே மகள் காதல் திருமணம் செய்து கொண்டதாக வாட்ஸ் அப்பில் அனுப்பிய திருமணமான போட்டோவை பார்த்து, மனமுடைந்த தந்தை, தாய் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே மகள் காதல் திருமணம் செய்து கொண்டதாக வாட்ஸ் அப்பில் அனுப்பிய திருமணமான போட்டோவை பார்த்து, மனமுடைந்த தந்தை, தாய் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

    திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து குன்னத்தூர் அருகே பொளையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (65) இவரது மனைவி சுமதி (55). இவர்களுக்கு ஜனனி (23) என்ற மகள் உள்ளார். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிசியோதெரபி டாக்டருக்கு மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

    ஜனனிக்கு உறவினர் முறை உள்ள அதே பகுதியை சேர்ந்த இறைச்சிக்கடை நடத்திவரும் சம்பத் (41) என்பவருக்கும் இடையே காதல் இருந்து வந்துள்ளது. ஜனனியின் காதலுக்கு அவரது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். கொரோனா தொற்று ஊரடங்கால் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்த ஜனனி செய்வதறியாமல் தவித்து வந்துள்ளார்.

    தற்போது அரசு அறிவித்த தளர்வுகளால் மீண்டும் கல்லூரி திறக்கப்பட்டது. இதை நல் வாய்ப்பாக நினைத்த ஜனனி கோவையில் சம்பத்தை நேற்று திருமணம் செய்துள்ளார். நீண்ட நேரமாக ஜனனி வீட்டுக்கு திரும்பாததால் பதறிப்போன பெற்றோர்  அவருக்கு பல முறை போனில் தொடர்பு கொண்டுள்ளனர்.

    Also read: மருமகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த மாமனார்.. நீதிகேட்கும் இளம்பெண்

    ஆனால் இவர்கள் அழைப்புகளை ஏற்காத ஜனனி இரவு தனது தந்தையின் வாட்ஸ் அப்பிற்கு கோவையில் தனது காதலனுடன் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்து தாங்கள் திருமணம் செய்து கொண்டதற்கான  போட்டோவையும் அனுப்பி வைத்துள்ளார்.

    இதனை பார்த்து மனமுடைந்த ஜனனியின் தாய், தந்தை இருவரும் பார்த்து, பார்த்து வளர்த்த ஒரே மகள் தங்களை நிராகரித்து விட்டு தனியாக முடிவெடுத்து திருமணம் செய்து கொண்டதால் தற்கொலை செய்ய முடிவெடுத்து வாழைப்பழத்தில் விஷ மாத்திரையை வைத்து சாப்பிட்டுவிட்டு, தூக்கு மாட்டிக்கொள்ள தயாரான நிலையில், விஷ மாத்திரையின் வீரியத்தால் மயக்கமடைந்து விழுந்து உயிர் அப்படியே பிரிந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தொடர்ந்து, இன்று காலை இவர்கள் வீட்டுக்கு வந்த உறவினர் கதவு தாழிடப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்து உள்ளே சென்று பார்த்த போது கணவன் மனைவி இருவரும் இறந்து கிடந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து குன்னத்தூர் போலீசாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதங்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

    சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

    First published: