கள்ளக்காதலை தட்டிக்கேட்ட தாயை தீயிட்டு கொளுத்திய மகள்

சென்னை குரோம்பேட்டையில் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட தாயை, மகளே தீயீட்டு கொளுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

Web Desk | news18
Updated: January 11, 2019, 11:37 PM IST
கள்ளக்காதலை தட்டிக்கேட்ட தாயை தீயிட்டு கொளுத்திய மகள்
சென்னை குரோம்பேட்டையில் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட தாயை, மகளே தீயீட்டு கொளுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.
Web Desk | news18
Updated: January 11, 2019, 11:37 PM IST
சென்னை குரோம்பேட்டையில் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட தாயை, காதலனோடு சேர்ந்து மகளே தீயீட்டு கொளுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

குரோம்பேட்டை மீனாட்சி அம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் பூபதி என்ற மூதாட்டி.  கடந்த 7ம் தேதி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பூபதி உயிரிழந்தார். பூபதியின் இளைய மகள் நந்தினியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தானாக வீட்டில் தீப்பற்றியதாக தெரிவித்துள்ளார்.

போலீசாருக்கு நந்தினியின் மேல் சந்தேகம் ஏற்பட அவரிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் பல  அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின.

தாயார் வீட்டிலேயே வசித்து வந்த நந்தினிக்கும், திருநீர்மலையை சேர்ந்த முருகன் என்பவருக்கும் தவறான உறவு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த தாய், நந்தினியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நந்தினி தாய் பூபதி அசதியில் படுத்துக் கொண்டிருந்தபோது, காதலனோடு சேர்ந்து தீவைத்து கொளுத்தியுள்ளார். பின்னர் யாருக்கும் சந்தேகம் ஏற்படாதவாறு, தானாக தீப்பற்றியது என நந்தினி நாடகமாடியுள்ளார். போலிஸ் நடத்தில் தீவ்ர விசாரணையில் அனைத்து உண்மைகளும்  தெரியவந்துள்ளது

இதையடுத்து நந்தினியைம், அவரது காதலன் முருகனையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

also see

First published: January 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...