தந்தை இறந்த செய்தி கேட்ட அதிர்ச்சியில் மகள் மரணம்... ராணிப்பேட்டை அருகே சோகம்..

தந்தை சம்பத் - மகள் ரேணுகாதேவி

தகவல் கேட்டு அதிர்ச்சி அடைந்த ரேனுகா தேவி வீட்டிலேயே மயங்கி விழுந்துள்ளார்.

 • Share this:
  ராணிப்பேட்டை அருகே மாரடைப்பால் மருத்துவமனையில்  தந்தை இறந்த  செய்தி கேட்ட  வீட்டிலிருந்த மகள்  அதிர்ச்சியில் மரணமடைந்த சம்பவம்  பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  ராணிப்பேட்டை அடுத்த காரை நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் (63), இவர் தனியார் ஷூ  தொழிற்சாலையில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ரேணுகாதேவி திருமணமாகி தன் தந்தை வீட்டிலிருந்த படி ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள தனியார் ஷூ தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.

  தனியார் பேருந்து ஓட்டுனர் சம்பத்துக்கு ஏற்கனவே மாரடைப்பு மற்றும் சுவாசப் பிரச்சினை இருந்துள்ளதாக கூறப்படுகிறது.கடந்த சில நாட்களாக சம்பத் உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பத்துக்கு சனிக்கிழமை காலை மூச்சுத் திணறல் ஏற்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.

  இதுகுறித்த தகவல் வீட்டில் இருந்த அவரது மூத்த மகள் ரேணுகா தேவிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் கேட்டு அதிர்ச்சி அடைந்த ரேனுகா தேவி வீட்டிலேயே மயங்கி விழுந்துள்ளார். அங்குள்ளவர்கள் ரேணுகா தேவியை மீட்டு உடனடியாக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரேணுகா தேவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

  Read  More:     தந்தையை இழந்த துயரத்திலும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி வழங்கிய சிறுமி - முதல்வருக்கு உருக்கமான கடிதம்

  இதையடுத்து காரை நேரு நகரில் தந்தை மகள் இருவரது பிரேதங்களை அருகருகே வைக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து  இறந்த தந்தை, மகள் சடலங்கள் ஞாயிற்றுக்கிழமை  நல்லடக்கம்  செய்யப்பட  உள்ளது.    தந்தை இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் மகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  ராணிப்பேட்டை செய்தியாளர் சிவ கருணாகரன்
  Published by:Arun
  First published: