திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப் பூண்டியை அடுத்த கவரை பேட்டையில் ரயில் நிலையத்தில் ஓடும் மின்சார ரயிலில் பள்ளி மாணவருடன் சேர்ந்து மாணவி ஒருவரும் ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
கவரப்பேட்டையில் ரயில் நிலையத்தில் இருந்து மின்சார ரயில் புறப்பட்டு மெதுவாக நகரவும், அந்த மாணவி ரயில் படிக்கட்டில் உள்ள கம்பியை பிடித்தபடி சிறிது தூரம் நடைமேடையில் ஓடி வந்து பின்னர் துள்ளிக் குதித்து ரயிலில் ஏறுகின்றாள். பின்னர் அதே வேகத்தில் ரயில் படிக்கட்டில் தொங்கியபடி தனது ஒரு காலை நடைமேடையில் உரசிய படி சக பள்ளி மாணவருடன் சேர்ந்து பயணம் செய்யும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது.
திருவள்ளூர் கவரப்பேட்டையில் மின்சார ரயில் படிக்கட்டில் தொங்கியபடி பள்ளி மாணவி விபரீதமாக பயணம் செய்யும் காட்சி பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது@Anbil_Mahesh @GMSRailway @RPF_INDIA pic.twitter.com/OxcEy2Ub0k
— Vijay (@vijay_journo) November 25, 2021
மாணவர்களுக்கு நிகராக பள்ளி மாணவியின் இந்த விபரீத சாகசம் அங்கிருந்த பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலானதால் இதுபற்றி கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Viral Video