Home /News /tamil-nadu /

இளம்பெண்ணுடன் உல்லாசம்.. வீடியோ எடுத்து மிரட்டிய நடன ஆசிரியர் - தாயும் உடந்தை

இளம்பெண்ணுடன் உல்லாசம்.. வீடியோ எடுத்து மிரட்டிய நடன ஆசிரியர் - தாயும் உடந்தை

நடன ஆசிரியர் பிரபு

நடன ஆசிரியர் பிரபு

Pornographic Video: நடன ஆசிரியரான பிரபு இதுபோன்று பல பெண்களிடமும் நடந்திருக்கக்கூடும் என்று வினோதா தெரிவித்த நிலையில் அவரது செல்போனை பறிமுதல் செய்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
  கும்மிடிப்பூண்டியில் ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை  பாலியல் வன்கொடுமை செய்த  நடன ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். 

  சென்னையை அடுத்த மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வினோதா(வயது 28) இவர் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு வினோதாவின் தம்பி நடன பள்ளியில் சேர்ந்துள்ளார். அந்த பள்ளியின் ஆசிரியர்  பிரபுவும் வினோதாவின் தம்பியும்  நண்பர்களாக இருந்து வந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு பிரபுவுக்கும் - வினோதாவுக்கும் இன்ஸ்டாகிரம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

  2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரபுவின்  வளர்ப்பு தாய்க்கு உடல்நிலை சரியில்லை என கூறி  வினோதாவை சொகுசு காரில் ஏற்றிக்கொண்டு கும்மிடிப்பூண்டி அருகே உள்ள மாதர்பாக்கம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது  கூல்ட்ரிங்ஸ், பிஸ்கட் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வாங்கிக்கொண்டு முதலில் கூல்டிரிங்ஸ் குடிக்குமாறு வற்புறுத்தி குடிக்க செய்துள்ளார். கூல்டிரிங்ஸ் குடித்த இளம்பெண் மயக்கம் அடைந்ததும் பிரபு அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

  Also Read:  தன் தந்தையை கொலையை செய்த கணவரை, உறவினர்களுடன் சேர்ந்து தீர்த்துக் கட்டிய மனைவி.. நீதிமன்றத்தில் சரண்..

  தன்னை பலாத்காரம் செய்த விவரம்  தெரியவந்ததையடுத்து வினோதா  பிரபு மீது போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரித்ததில், இன்ஸ்டாகிராமில் பழகி வீட்டிற்கு வரவைத்து கூல்டிரிங்ஸில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த பிரபுவை கைது செய்து போலீசார் விசாரித்ததில் திடுக்கிட்டுப் போயினர்.

  வினோதாவை திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்று கூறி அவரை சமாதானப்படுத்தி. மீண்டும் பழக்கத்தை தொடர்ந்த நடன ஆசிரியர் பிரபு தான் வைத்திருந்த செல்போன் வீடியோவை காட்டி மிரட்டி அடிக்கடி இளம்பெண்ணுடம் பலமுறை தனிமையில் இருந்துள்ளார் . ஒரு கட்டத்தில் பிரபுவின் தாய் ரேவதிக்கு இந்த விஷயம் தெரியவர இருவருக்கும் திருமணம் செய்ய வேண்டும் என்றால் நகை, பணம் தேவைப்படுகிறது என்று கூறி அடிக்கடி வினோதாவிடம் பணம் கேட்டு வாங்கி உள்ளனர்.

  Also Read: பிரிந்துபோன கணவனை சந்திக்க ரயிலில் சென்ற மனைவிக்கு நேர்ந்த துயரம்.. கண்ணீர்வடிக்கும் இளம்பெண்

  தொடர்ந்து பிரபு  உடன்  திருமணம் செய்ய  வலியுறுத்தியபோது பிரபுவும் அவரது தாய் ரேவதியும் வினோதாவிடம் ராயபுரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்து வைக்க வேண்டும் அதற்கு ஒரு லட்சம் வரை பணம் செலவாகும் என கூறியுள்ளனர். இதற்கு வினோதா கூகுள் பே முலம் 80,000 ரூபாய் அனுப்பி உள்ளார். இரண்டு  நாட்களில் இருவரும் ராயபுரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றுள்ளனர். ஆனால் அங்கு வழக்கறிஞர்கள் வருவார்கள் என காத்திருந்து காத்திருந்து வழக்கறிஞர்கள் யாரும் வரவில்லை. இந்நிலையில் இதுகுறித்து வினோதா கேள்வி எழுப்பவே  பிரபுவின் தாய் ரேவதி எதிரே இருந்த கோயிலுக்கு அழைத்துச் சென்று  இருவருக்கும் தாலி கட்டாமல் மாலை மற்றும் மாற்றிக் கொண்டு தங்களது வீட்டிற்கு திரும்பி உள்ளனர்.

  இதற்கிடையில் 2022 ஜனவரி மாதம் வினோதா கர்ப்பமானார். இது இறித்து பிரபுவிடம் கேட்டதற்கு 100 சவரன், நகை 10 லட்சம் பணம் தர வேண்டும் அப்போதுதான் திருமணம் நடக்கும் என கூறியதோடு ஏற்கனவே உன்னோடு தனிமையில் பழகிய  வீடியோ உள்ளது அதனை இணையதளத்தில் விட்டு விடுவேன் என கூறி மிரட்டியுள்ளார். இதன் பின்னர் கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வினோதா சென்று மேற்கண்ட தகவலை கூறி புகார் மனு அளித்துள்ளார்.

  புகாரின் பேரில் அதிரடியாக பிரபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பிரபுவின் தாய் ரேவதி வசம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நடன ஆசிரியரான பிரபு இதுபோன்று பல பெண்களிடமும் நடந்திருக்கக்கூடும் என்று வினோதா தெரிவித்த நிலையில் அவரது செல்போனை பறிமுதல் செய்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

  செய்தியாளர்: பார்த்தசாரதி 

   
  Published by:Ramprasath H
  First published:

  Tags: Crime News, Love, Police, Sexual abuse, Sexual harasment

  அடுத்த செய்தி