முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அணை பாதுகாப்பு மசோதாவை தமிழகம் எதிர்க்க என்ன காரணம்?

அணை பாதுகாப்பு மசோதாவை தமிழகம் எதிர்க்க என்ன காரணம்?

முல்லை பெரியாறு அணை

முல்லை பெரியாறு அணை

மத்திய அரசு கொண்டுவந்துள்ள அணை பாதுகாப்பு மசோதா திமுக, அதிமுக கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

  • Last Updated :

நாடு முழுவதும் ஒரே சீரான அணை பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வழி வகை செய்யும் அணை பாதுகாப்பு மசோதா மக்களவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் . மாநிலங்களவையில் ஜல் சக்கி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மசோதாவை தாக்கல் செய்தார். மசோதாவின் மீது பேசிய திமுக எம்பி திருச்சி சிவா, அணை பாதுகாப்பு மசோதா அரசியல் சாசனத்திற்கு எதிராக உள்ளதாகவும், அதனை தேர்வுக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுகவும் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தது. கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையே அணை பாதுகாப்பு மசோதா மீறுவதாக அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் கூறினார். காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும் அணை பாதுகாப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள எம்பி சிவதாசன், பாரதியார் பாடல்களை குறிப்பிட்டு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

பின்னர் பேசிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், மசோதா நிறைவேற்றப்பட்டால் தமிழ் நாடு, கேரளா உள்பட எந்த மாநிலமும் நீதிமன்றம் செல்லத் தேவையிருக்காது என கூறினார். பின்னர் தேர்வுக் குழுவிற்கு அனுப்ப வேண்டுமா என்பது குறித்து குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் அனுப்ப வேண்டாம் என அரசுக்கு ஆதரவாக 80 பேர் வாக்களித்தனர். இதனை தொடர்ந்து அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது.

Also Read : வங்கக் கடலில் உருவாகும் ஜவாத் புயல் எங்கே, எப்போது கரையை கடக்கும்?

இந்தியா முழுவதும் ஒரே சீரான அணை பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்க அணை பாதுகாப்பு மசோதா வழிவகை செய்கிறது. மசோதா நிறைவேற்றப்பட்டால் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்படும். அந்த ஆணையம் அணை பாதுகாப்பு கொள்கைகளை உருவாக்கி, தேவைப்படும் வரைமுறைகளைப் பரிந்துரை செய்யும். அணைகள் பாதுகாப்பு குறித்த நெறிமுறைகள், அணைகளின் தரம் ஆகியவற்றை வகுப்பதிலும் பங்கு வகிக்கும்.

மாநிலங்கள் மற்றும் மாநில அணை பாதுகாப்பு அமைப்புகளுக்கு தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை உதவிகளை வழங்கும். புதிய அணைகளின் ஆய்வு, வடிவமைப்பு, கட்டுமானப் பணிகளை ஒப்படைக்க தகுதியுள்ள நிறுவனங்களுக்கான அங்கீகாரத்தை தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் வழங்கும். மாநிலங்களுக்கு இடையே தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்னைகளுக்கும் தீர்வு காணும்.

Also read : ஒமைக்கரான் அச்சுறுத்தல் : கர்நாடகாவில் அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்?

top videos

    முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், துணக்கடவு, பெருவாரிப்பள்ளம் ஆகிய 4 அணைகள் கேரளாவில் அமைந்துள்ளன. இருப்பினும் இந்த அணைகளை இயக்கி, பராமரிக்கும் அதிகாரம் தமிழ்நாடு அரசுக்குதான் உள்ளது. அணை பாதுகாப்பு மசோதா நடைமுறைக்கு வந்தால் இந்த 4 அணைகள் தொடர்பான தகவலை கேரளாவிடம் தமிழ்நாடு அரசு பகிர்ந்து கொள்ள வேண்டும். அணை பாதுகாப்புக்கான தேசியக் குழு என்பதும் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது எனக் கூறும் தமிழ் நாடு அதனை எதிர்க்கிறது.

    First published:

    Tags: Parliament