முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பள்ளி மாணவனை தாக்கி, கையால் மலம் அள்ள வைத்த கொடூரம் - வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் தோட்ட உரிமையாளர் கைது

பள்ளி மாணவனை தாக்கி, கையால் மலம் அள்ள வைத்த கொடூரம் - வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் தோட்ட உரிமையாளர் கைது

பாதிக்கப்பட்ட மாணவன்

பாதிக்கப்பட்ட மாணவன்

பென்னாகரம் அருகே கூடாரம் பட்டி பகுதியில் பள்ளி மாணவனை மலம் அள்ள வைத்து வன்கொடுமை செய்த வழக்கில், நில உரிமையாளரை போலீஸார் கைது செய்தனர்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கோடி அள்ளி ஊராட்சிக்குட்பட்ட கோடாரம்பட்டி பகுதியை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவன், அண்மையில் அருகிலுள்ள விளைநிலத்தில் மலம் கழித்த நிலையில், நில உரிமையாளர் சிறுவனை அடித்து, மலத்தினை கைகளால் எடுக்க வைத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் நிலையத்தில் நில உரிமையாளரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில், விசாரணை மேற்கொண்டு வந்த பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் மேகலா மற்றும் போலீஸார் நேற்று இரவு நில உரிமையாளர் ராஜசேகர் (51) என்பவரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து, தரமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

First published:

Tags: Dharmapuri