100 நாள் வேலை: தினக்கூலி ₹300 ஆக உயர்த்தி தரப்படும் - அமைச்சர் உறுதி

MGNREGA

100 நாள் வேலைத் திட்டத்திற்கு ரூ300 கொடுப்பதற்கான திமுகவின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படும்.

 • Share this:
  100 நாள் வேலைத் திட்டத்தில் தினக்கூலி 300 ரூபாயாக உயர்த்தி தரப்படும் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

  தலைமைச்செயலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “100 நாள் வேலைத் திட்டத்திற்கு ரூ300 கொடுப்பதற்கான திமுகவின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் முதலமைச்சர் நிறைவேற்றுவார் என்றார்.

  தொடர்ந்து பேசிய அவர், மாநகராட்சிகளுக்கு அருகே உள்ள ஒரு சில ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைய விருப்பம் தெரிவிக்கின்றனர். அதுகுறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் என்றார்.

  Also Read:  மயானத்தில் காதல் ஜோடிக்கு திருமணம் நடத்திய பெற்றோர்!

  ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது.  ஒரு சிலர் மொத்தமாக உள்ளாட்சி பணிகளை எடுத்து காலதாமதமாக மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கால தாமதமானால் டெண்டர் ரத்து செய்யப்படும்.

  அதிக அளவில் ஜல் ஜீவன் திட்டத்தில் பணிகள் தரமாக இல்லை என புகார்கள் வந்துள்ளது.   கடந்த ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மீது காழ்ப்புணர்ச்சி இல்லை..

  Also Read:   யப்பா என்னா அடி..! போலீஸ் முன்னிலையில் டேக்ஸி ஓட்டுநரை தாக்கிய இளம் பெண்.. தடுக்க வந்தவருக்கும் அடி..

  அம்மா இருசக்கர வாகன திட்ட செயல்பாடு, நிதி நிலைமையை கருத்தில் கொண்டு முதலமைச்சர் முடிவு செய்வார் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  2021 - 22 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை வரும் 13ஆம் தேதி தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (ஆகஸ்ட் 4) நடைபெற உள்ளது, இதில் விவசாயத்துக்கென தனியாக பட்ஜெட் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.
  Published by:Arun
  First published: