• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தினமும் ஒரு திருக்குறள் கூறி அதனை விளக்க வேண்டும் - வழக்கறிஞர்களுக்கு நீதிபதி அறிவுறுத்தல்

தினமும் ஒரு திருக்குறள் கூறி அதனை விளக்க வேண்டும் - வழக்கறிஞர்களுக்கு நீதிபதி அறிவுறுத்தல்

நீதிபதி சுவாமிநாதன்

நீதிபதி சுவாமிநாதன்

  • News18
  • Last Updated :
  • Share this:
    உயர்நீதி மன்ற மதுரை கிளை வளாக நீதிமன்றத்தில் நாள் தோரும் ஒரு திருக்குறளை கூறி அதன் விளக்க உரையும் படிக்க வழக்கறிஞருக்கு நீதிபதி G.R. சுவாமிநாதன் அறிவுறுத்தியுள்ளார்.

    உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி G.R. சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது :

    கூடுதல் மாவட்ட நீதிபதி செம்மல் அவர்களின் மகன் பழமலையை சமீபத்தில் நான் சந்தித்தேன். அப்போது, அவர் எனக்கு "திருக்குறள் முனுசாமி" என்கிற திருக்குறள் புத்தகத்தை அன்பளிப்பாக வழங்கினார்.

    அதை படித்தபின்பு, நீதிபதி ஹரிபரந்தாமன், மற்றும் நீதிபதி மகாதேவன் ஆகியோர் திருக்குறளை பற்றி கூறியது எனது நினைவில் வந்தது. தமிழர்கள் ஆகிய நாம் 51 திருக்குறளையாவது மனப்படமாக தெரிந்து வைத்து இருக்க வேண்டும்.

    எனவே நான் தினமும் ஒரு திருக்குறள் படிக்க இருக்கிறேன்.மேலும் நீதிமன்றத்தில் விசாரிக்க உள்ள வழக்குகள் நாள் தோறும் பட்டியலிடப்படும். அதில் ஒரு வழக்கறிஞரை தேர்வு செய்து, அவரை ஒரு திருக்குறளை விளக்க உரையுடன், மதியம் 1:30 மணி அல்லது மாலை 4:45 மணிக்கு நீதிமன்றத்தில் அனைவரும் அறியும் வண்ணம் படிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறேன்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: