ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Headlines Today : தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 700-ஐ நெருங்கியது - தலைப்புச் செய்திகள் (ஜூன் 20, 2022)

Headlines Today : தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 700-ஐ நெருங்கியது - தலைப்புச் செய்திகள் (ஜூன் 20, 2022)

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Headlines Today : தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை கொரோனா தொற்றால் 596 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் 692 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன.

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு இன்று தொடங்குகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமைக்கு எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்படுவார் என சட்டப்பேரவை முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

அதிமுக-வில் ஒற்றைத் தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை என ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில், மாவட்ட அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழையால், தாழ்வான இடங்களை மழைநீர் சூழ்ந்தது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்னும் 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சிறுவாணி குடிநீர் திட்டப் பயனாளிகளுக்கு தடையின்றி தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க கேரள முதலமைச்சருக்கு, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

பள்ளிகள் திறக்கப்பட்டபோதிலும் ஞாயிற்றுக்கிழமையொட்டி உதகை, கொடைக்கானல் போன்ற சுற்றுலாதலங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அகில இந்திய பணியாளர் தொகுதி ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் பேஸ்புக் காதலி கூறியதால் இளைஞரை கொன்று சாக்கு மூட்டையில் உடலை கட்டி வாய்க்காலில் வீசிய போலீஸ்காரர் கைது.

நீலகிரி மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகளில் வலம் வரும் கரடிகளால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே, நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது பிக்அப் ஆட்டோ மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.

அசாம், மேகாலயா மாநிலங்கள் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மின கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

டெல்லியில் 920 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பிரகதி மைதான ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தட திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

அக்னிபத் திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டக் குழுக்கள் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதால் பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெறும் வாய்ப்பு இல்லை என ராணுவ விவகாரங்கள் துறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

அக்னிபத் திட்டம் இளைஞர்களின் உயிரைப் பறித்து. ராணுவத்தையும் அழித்துவிடும் என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

அக்னிபத் திட்டத்துக்கு எதிராக வன்முறைகள் அரங்கேறி வரும் நிலையில், திட்டத்தை பற்றி தவறான தகவல்களை பரப்பிய 35 வாட்ஸ்ஆப் குழுக்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

பீகாரில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பறவை மோதி தீ பிடித்ததை தொடர்ந்து அந்த விமானம் பாட்னாவில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஹைதராபாத்திலிருந்து நாகர்கோவிலுக்கு கூரியரில் கஞ்சா கடத்தி, இன்ஸ்டாகிராம் மூலம் விற்பனை செய்து வந்த 3 பொறியியல் பட்டதாரி இளைஞர்கள் கைது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு உதவுவதில் இந்தியா தனித்து நிற்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காமில் தீவிரவாதிகளுடன் காவல்துறை நடத்திய துப்பாக்கி சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

Must Read : திராவிட மாடல் ஆட்சியை எந்த கொம்பனாலும் அசைத்து பார்க்க முடியாது - கி.வீரமணி

தமிழகத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான அதிகாரப்பூர்வ ஜோதி ஓட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் தொடங்கி வைத்தார்.

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டி-20 போட்டி, மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டது. இதனால், 2-2 என தொடர் சமனில் முடிந்தது.

First published:

Tags: Headlines, Tamil News, Top News