ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்நடவடிக்கை கைவிடப்பட்டது - லஞ்ச ஒழிப்புத்துறை

news18
Updated: August 14, 2019, 1:53 PM IST
ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்நடவடிக்கை கைவிடப்பட்டது - லஞ்ச ஒழிப்புத்துறை
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
news18
Updated: August 14, 2019, 1:53 PM IST
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், வழக்கில் மேல்நடவடிக்கை கைவிடப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அமைச்சர் பதவியை பயன்படுத்தி ராஜேந்திர பாலாஜி 2011 முதல் 2013 வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார் அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கில் விசாரணையின் அடிப்படையில் மேல்நடவடிக்கை கைவிடப்பட்டது என்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களையும்  தாக்கல் செய்ய தமிழக பொதுத்துறை செயலருக்கு உத்தரவிட்டு, வழக்கை ஆகஸ்ட் 26-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

First published: August 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...