முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கால் டாக்சி ஓட்டுநர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள தமிழக அரசின் கட்டுப்பாடில் இயங்கும் 'D TAXI' ஆப்

கால் டாக்சி ஓட்டுநர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள தமிழக அரசின் கட்டுப்பாடில் இயங்கும் 'D TAXI' ஆப்

கோப்புப்படம்

கோப்புப்படம்

D டாக்ஸி தொழிற் கூட்டுறவு சங்கம் என்ற புதிய நிறுவனத்தால் லாபம் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தனியார் கார்ப்ரேட் நிறுவனங்களின் கால் டாக்சி அப்ளிகேஷன்களால் கமிஷன் கொடுத்து சிரமப்பட்டு வந்த ஓட்டுநர்களுக்கு தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் D டாக்ஸி தொழிற் கூட்டுறவு சங்கம் என்ற புதிய நிறுவனத்தால் லாபம் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் கமிஷன் பெறுவதால் தங்களுக்கு லாபமே இல்லாமல் நஷ்டத்தில் கார் இயக்க வேண்டிய சூழல் ஏற்படுவதாக ஓட்டுனர்கள் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழத்தில் இருக்கக்கூடிய கார் ஓட்டுநர்களை ஒன்றிணைக்கும் வகையில் தாங்களே ஒரு அப்ளிகேஷனை உருவாக்குங்கள் என்று தமிழக அரசின் வணிக தொழில் துறை சார்பில் ஓட்டுனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதை ஆவின் நிறுவனம் போன்று கூட்டுறவு சங்கங்களுக்கு கீழ் கொண்டு வாருங்கள் என்றும் அறிவுரை வழங்கப்பட்டது.

Also read: தொடர்ந்து 4-வது முறையாக பீகார் முதல்வராகிறார் நிதிஷ் குமார்... நாளை பதவியேற்பு

இதன் அடிப்படையில் டி டாக்சி அப்ளிகேசன் உருவாக்கப்பட்டு தற்பொழுது முழுமை அடைந்துள்ளது. இதன் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்கும் 30 சதவீத கமிஷனில் இருந்து விடுபெற்று மாதம் 2,900 ரூபாய் மட்டும் செலுத்தி எத்தனை சவாரிகள் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என டி டாக்சி நிறுவன தொழிற் கூட்டுறவு சங்கத் தலைவர் பாலாஜி தெரிவிக்கிறார்.

இந்நிலையில், பீக் அவர்ஸ் எனப்படும் காலை மற்றும் மாலை நேரங்களில் மற்ற கார்ப்ரேட் நிறுவனங்கள் வசூலிப்பது போல் கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் குறைவான கட்டணம் வசூலிப்பதே தங்கள் டி டேக்சி ஆப்பின் சிறப்பு என அந்நிறுவனத்தினர் கூறுகின்றனர். அத்தோடு குறைந்த அளவிளான கேன்சலேசன் கட்டணமே வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

தனியார் கார்ப்ரேட் நிறுவனங்களிடம் இருந்து ஓட்டுனர்களை காக்க ஓட்டுனர்களால் உருவாக்கப்பட்டதே D டாக்ஸி தொழிற் கூட்டுறவு சங்கம் என அந்நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர். இதற்கு அனைத்து ஓட்டுனர்களும், பொதுமக்களும் நல்ல வரவேற்பு அளிக்க வேண்டும் எனவும் D டாக்ஸி தொழிற் கூட்டுறவு சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

First published:

Tags: D Taxi