பாஜக தமிழகத்தை கபளீகரம் செய்துவிடும், தமிழ்நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றும் 5 மாநில தேர்தல் முடிவுகள் இந்திய அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்யும் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா கூறியுள்ளார்.
கோவை சிரியன் சர்ச் சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜா பேசுகையில், “தமிழ்நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மக்கள் ஆதரவை பெற்றுள்ளது. பாஜக-அதிமுக கூட்டணியை மக்கள் தோல்வியடைய செய்ய உள்ளார்கள்.
5 மாநில தேர்தல் முடிவுகள் இந்திய அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்யும் தேர்தல். இந்திய அரசியல் சட்டங்களை மத்திய பாஜக அரசு தகர்த்து வருகிறது. பாஜக வெறும் அரசியல் கட்சியல்ல, ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் பிரிவு. மதவெறி பாசிச ஆட்சியை நிலை நிறுத்த ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக முயற்சிக்கிறது.
பாஜக தமிழ்நாட்டில் காலுன்றி விடக்கூடாது. பாஜக தமிழகத்தை கபளீகரம் செய்துவிடும். நரேந்திர மோடியின் ஆட்சி ஜனநாயகத்திற்கு பெரிய அடி.
அதிமுக அரசு மாநில உரிமைகள் மற்றும் மாநில நலன்களை காப்பாற்றுவதில் மிகப் பெரிய தோல்வியை கண்டுள்ளது. அதிமுகவை பயன்படுத்தி பாஜக தமிழ்நாட்டில் காலுன்ற பார்க்கிறது. அதிமுகவானது பாஜக மற்றும்
பிரதமர் நரேந்திர மோடி படத்தை பயன்படுத்தி பிரச்சாரம் செய்யாதது, தோல்வி பயத்தை காட்டுகிறது. மக்கள் ஏற்கமாட்டார்கள் என்ற அச்சம் அவர்களிடம் உள்ளது.
Must Read : எனது பேச்சுக்கு மனம் வருந்துகிறேன், முதல்வர் காயப்பட்டால் மன்னிப்பு கோருகிறேன் - ஆ.ராசா
கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் திமுகவிற்கு கொள்கைகள் உள்ளன.
மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை என்ன? மக்கள் கமல்ஹாசனை பாஜகவின் பி டீம் என சந்தேகப்படுகிறார்கள்” என்று கூறினார்.