• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கூரையேறி கோழி பிடிக்க தெரியாதவன்... டிடிவி தினகரனை விமர்சிக்கும் முன்னாள் அமைச்சர் 

கூரையேறி கோழி பிடிக்க தெரியாதவன்... டிடிவி தினகரனை விமர்சிக்கும் முன்னாள் அமைச்சர் 

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் கடலில் கரைத்த பெருங்காயம் போன்றது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

  • Share this:
‘கூரையேறி கோழி பிடிக்க தெரியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போக ஆசைப்படுவதெல்லாம்’ நடக்கவே நடக்காது என்று கூறி டிடிவி தினகரனை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக்கூறி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது, திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் கடலில் கரைத்த பெருங்காயம் போன்றது என ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தின் போது திமுக அரசை விமர்சிக்கும் வகையில் ஜெயக்குமார் பேசினார்.

ஆர்ப்பாட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அரசு சொன்னதை இதுநாள்வரை செய்யவில்லை” என்று குற்றம்சாட்டினார்.

Must Read : திமுக அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்.. ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்பு

மேலும், பெட்ரோல், விலை லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாயும் டீசல் விலை 4 ரூபாய் குறைக்கப்படும் என்று சொன்னதை இதுவரை அரசு நிறைவேற்றவில்லை என்றும், வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி இதுநாள் வரை நிறைவேற்றப்படவில்லை என்றும் குற்றம்சாட்டிய அவர், திமுக வாக்குறுதிகள் கடலில் கரைத்த பெருங்காயம் போன்றது எனவும் விமர்சித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

மேலும், டிடிவி தினகரன் அதிமுகவை மீட்டெடுப்பதற்கான பணிகளை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தொடர்ந்து செய்யும் என்று கூறி இருந்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், டிடிவி தினகரனும், சசிகலாவும் அதிமுகவுக்கு தொடர்பில்லாதவர்கள். அவர்கள் கட்சியை மீட்டு எடுப்பதெல்லாம் நடக்குமா? என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும், “கூரையேறி கோழி பிடிக்க தெரியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போக ஆசைப்படுவதெல்லாம் நடக்கவே நடக்காது. அமமுகவை நிலை நிறுத்திக்கொள்ளாதவர்கள் எப்படி அதிமுக வை மீட்பார்கள்” என்றும் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: